📖 generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 150grammar_exercise

ஒருங்கமைத்தல்

Chapter 69: படிப்போம் பயன்படுத்துவPோம் · ADVANCED TAMIL

ஒருங்கமைத்தல் ஒரு காட்சியை எடுக்கும்போது அக்காட்சிக்கு ஏற்பத் திரைக்கதையும் உருவாக்கப்படும். அக்காட்சியில் வரும் கதாபாத்திரம், அவர்கள் பேசும் உரையாடல், ஒலி, ஒளி (வண்ணம்) போன றவை திரைக்கதையிலேயே குறிக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் ஓர் ஒருங்கமைவு இருக்கும். சட்டகத்தில் உள்ள நடிகர்கள் மற்றும் பொருட்கள் அனைத்தையும் ஓர் அழகியல் முறையில் ஒருங்கிணைத்து அமைக்கும் கலையே ஒருங்கமைத்தல் (Composition) என்று கூறுவர்.

ஆதிலட்சுமியின் வீட்டில் நிகழும் நிகழ்வைக் காட்சிப்படுத்தும்போது கதாபாத்திரங்கள் அவற்றின் தன்மையோடு இருத்தல் வேண்டும். ஏழை கூலித்தொழிலாளராக இருக்கும் அவர்கள் வீட்டின் பின்புலம், அவர்களின் நடை, உடை, பாவனை, வட்டாரப்பேச்சு முறை இவை யெல்லாம் ஒருங்கமைத்து ஒரே சட்டகத்திற்குள் கொண்டு அமைக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் அந்தக் காட்சி மூலம் பார்வையாளருக்கு நாம் என்ன சொல்ல வருகிறோமோ அதுபோய்ச் சேரும். இதற்குக் கூடுதல் சிறப்பாக அமைவது ஒலியும் ஒளியும்.

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →