📖 generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 106definition

கதை முகம்

Chapter 69: படிப்போம் பயன்படுத்துவPோம் · ADVANCED TAMIL

கதை முகம் சுற்றுச்சூழல் பற்றி அதிகமும் பேசப்படாத காலத்தில், காடுகளின்மீது மனிதன் நடத்திய அழிவை மையமாக வைத்து, தஞ்சை மாவட்டக் கிராமமான சாயாவனத்தின் பின்னணியில் எழுதப்பட்டது இந்தப் புதினம். சுருக்கமான நேரடி மொழியில் எழுதப்பட்டுள்ள இது, தமிழின் மிக முக்கியமான ஒன்று. இன்றைய சூழலுக்கும் பொருத்தமான வாசிப்பனுபவத்தைத் தருகிறது. ஒளி வீச்சில் அழகிய இனிமை வாய்ந்த பொழுது மெல்ல மெல்ல உருவாகிக் கொண்டிருந்தது.

சிதம்பரம் வனத்திற்குத் தன்னந்தனியே சென்றான். அவன் வெட்டிச் சாய்த்த செடிகள் வாடிச் சோர்ந்து கிடந்தன. காரைகூட வதங்கிக் கொண்டு வந்தது. எதிர்பார்த்தற்கு மாறாகக் காரியங்கள் நடந்தத ல் அவன் மகிழ்ச்சியுற்றான்.

இயற்கை பல விதங்களில் தனக்கு மிகுந்த அனுசரணையாக இருப்பது போல தEோன்றியது. சிதம்பரம், கொடிகள் காலில் பின்ன நடந்து சென்று பக்கத்திற்கொன்றாய்ச் சிதறிக்கிடந்த அலக்கு, தEொரட்டி, அரிவாள், மண்வெட்டி – எல்லாவற்றையும் கொண்டு வந்து ஓரிடத்தில் வைத்துவிட்டு மீண்டும் வேலையைத் துவக்கினான். காட்டாமணக்கைவிட, ஆடாதEொடையை விட, குத்துக்குத்தாகத் தாழ்ந்தும் உயர்ந்தும் வளரும் கள்ளியையும் சப்பாத்தியையும்விட, காரைதான் வனம் முழுவதும் வியாபித்திருந்தது. ஒவ் வொரு மரத்தின் கீழும் காரை பெருகி வளர்ந்து தழைத்துப் படர்ந்திருந்தது.

கொடிமாதிரி ஒரு முடிவின்றி வனம் முழுவதையும் தன்னுடைய ஆதிக்கத்திற்கு கொஞ்சம் கொஞ்சமாகக் கொண்டுவந்து விட்டது. இயற்கையின் அதிசயப் போக்கு அது. வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றிவாகை சூடிய காரையைச் சற்றே வளைத்துச் சின்ன முட்கள் கீறிக் கிழிக்க வெட்டிச் சாய்த்துக் கொண்டு போனான் சிதம்பரம். வரவர செடிகொடிகளோடு போராடுவது அவனுக்கு எளிமையாகிக் கொண்டு வந்தது.

கொஞ்சம் கொஞ்சமாக அவைகளின் நெளிவு சுளிவுகளையெல்லாம் அவன் தெரிந்து கொண்டு விட்டான். எப்படி வளைத்துப் பிடித்தால் ஒரே வெட்டில் காரை சாயும் என்பது அத்துபடியாகி விட்டது. ஆடாதEொடையை வெட்டுவது மாதிரி ஒருவித முயற்சியுமின்றிக் காரையை வெட்டிச்சாய்த்தான். அவனுடைய சக்தியைப் பலவீனப்படுத்திக் கொண்டிருந்த காரை, படிப்படியாக அதே கர்வத்தோடும் பெருமிதத்தோடும் சரணடையத் தEொடங்கியது.

காரைக்கு இடையே ஈச்சம் பரப்பு; ஈச்சனின் வீச்சு வீச்சாய் மட்டைகள்; ஒவ் வொரு சிறு இலையின் முனையிலும் கரும்சிவப்பு முட்கள். ஒரு புதுமையான பரப்பு; தEொடர்ந்து வெகுதூரம் வரையில் சென்று கொண்டிருந்தது. ஒரு வண்ண மாற்றம்; பூமாதேவி தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறாள்; எவ்வளவு கவர்ச்சிகரமான மாற்றம்! ஈச்சனைத் தாழ வளைத்து வெட்டும்போது அரிவாள் அவன் இடது கையில் பாய்ந்தது.

வலுவான, ஆழமான வெட்டு. ரத்தம் குபுகுபுவென்று வந்தது. முகத்தைச் சுளித்து, வலியை மிகுந்த பிரயாசைப்பட்டு அடக்கிக் கொண்டு – வாயில் கையை வைத்து ரத்தத்தை

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →