📖 generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 146poem

முடிச்சு (knot)

Chapter 69: படிப்போம் பயன்படுத்துவPோம் · ADVANCED TAMIL

முடிச்சு (knot) திரைக்கதையின் உயிர்மூச்சு முடிச்சு ஆகும். கதையின் விறுவிறுப்பு கதைமுடிச்சில் உள்ளது. இதனை ஆங்கிலத்தில் ‘நாட்‘ (Knot) என்பர். காப்பியம், புதினம் முதலிய எல்லாவகைக் கதை இலக்கியங்களுக்கும் இந்த முடிச்சு அடிப்படையானது. அதனால் ஒரு கதையில் முடிச்சு எது என்பதை அறிதல் வேண்டும். ஒரு சிக்கலை முடிச்சு எனக் கருதலாம். ‘திரைக்கதையில் அவிழ்ப்பதற்கு மிகச் சவாலான சிக்கலே முடிச்சு‘ என்று கூறுவர். இதனை இடைஞ்சல், லாக், ஸடன் டிவிஸ்ட், பொறி, ஐடியா என்று பல பெயர்களால் சுட்டுவர். ஒரு திரைக்கதையில் எத்தனை கற்பனை வளமான காட்சிகளைச் சேர்த்துச் சுவையாக்கினாலும், விவாதப்பொருண்மை என்னும் அடிப்படையான கருத்து இல்லாமல் திரைக்கதையை எழுதத் தEொடங்கக் கூடாது என்பர்.

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →