📖 generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 146grammar_exercise

ஒருவரிக் கதை (One Line)

Chapter 69: படிப்போம் பயன்படுத்துவPோம் · ADVANCED TAMIL

ஒருவரிக் கதை (One Line) திரைக்கதையைத் தேர்ந்தெடுத்துவிட்டால், அதன் பிறகு செய்ய வேண்டிய வேலை, அதைக் காட்சிகளாகப் பிரித்து, காட்சிகளில் அந்தந்த இடங்களுக்குத் தேவையான, முக்கியமான வசனங்களை உட்படுத்துவது. சுருக்கமாகச் சொன்ன ஒரு கதையை, விரிவான காட்சிகளாக மாற்றி அமைக்க முதலில் இதை ஒருவரியாக மாற்ற வேண்டும். எடுக்கப்போகும் ஒரு திரைப்படத்தின் கதையை மிகமிகச் சுருக்கமாக ஒரு பத்தி அளவில் சொல்லப்படுகிற கதைச்சுருக்கம் ‘ஒன் லைன்‘ அல்லது ‘ஒருவரிக் கதை‘ என்று கூறப்படும். இரண்டரை மணிநேரம் திரையில் ஓடக்கூடிய ஒரு திரைப்படத்தின் கதையை ஒரு நிமிட நேரத்திற்குள் மிகவும் சுருக்கமாகச் சொல்வதால், இதனை ஒருவரிக் கதை என்று சொல்வர்.

ஒவ்வொரு காட்சியையும் இரண்டு அல்லது மூன்று வரிக்குள் எழுதும் சுருக்க வடிவமாகவும் ஒருவரி அமையும். இந்த ஒருவரி அடிப்படையில்தான் திரைக்கதையின் ஒவ்வொரு காட்சியும் எழுதப்படுகிறது. இந்தக் காட்சிகளை வைத்துக்கொண்டுதான் காட்சித் துணிப்புகளை உருவாக்குகின்றனர். பல காட்சித் துணிப்புகள் சேர்ந்துதான் ஒரு காட்சியானது உருவாகின்றது.

திரைக்கதையில் மிகவும் முக்கியமான கட்டமைப்பு முறையே காட்சி எனப்படுகிறது. காட்சிகள்தாம் கதையை நகர்த்திச் செல்ல உதவும். 12th Std - Advance Tamil - Chaper - - :

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →