முற்போக்குப் புதினங்கள் பொதுவுடைமைச் சமூக விடுதலை நோக்கத்தைத் தங்கள் இலக்காகக் கொண்ட படைப்பு முற்போக்கு இலக்கியம் என்றழைக்கப்படுகிறது. பொதுவுடைமை ப் பேசும் ரஷ்ய இலக்கியங்கள் போன்ற மேலைநாட்டு இலக்கியங்களின் வருகையால் தமிழிலும் இவ்வகை இலக்கியங்கள் தEோன்றின. இப் பொருண்மையை உள்ளடக்கமாகக் கொண்டு படைக்கப்பட்ட புதினங்களை முற்போக்குப் புதினங்கள் எனலாம். தமிழில் முற்போக்குப் புதினங்களை முதலில் தந்தவர் தEொ.மு.சி.ரகுநாதன். அவர் எழுதிய பஞ்சும் பசியும் என்ற புதினம் பஞ்சாலைத் தEொழிலாளர்களின் போராட்ட வாழ்வைப் பற்றிப் பேசுகிறது. முற்போக்குச் சிந்தனையாளரான ஜெயகாந்தனின் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம், சில நேரங்களில் சில மனிதர்கள், கங்கை எங்கே போகிறாள், சுந்தரகாண்டம், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் போன்ற புதினங்கள் குறிப்பிடத்தகுந்தவை.
📖 generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 57poem
முற்போக்குப் புதினங்கள்
Chapter 69: படிப்போம் பயன்படுத்துவPோம் · ADVANCED TAMIL
Related topics
Have a question about this topic?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →