வட்டார வழக்குப் புதினங்கள் வட்டாரப் புதினம் என்பது, குறிப்பிட்ட ஒரு பகுதியைக் களமாகக்கொண்டு, அப்பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கையை எடுத்துக்காட்டும் குறிக்கோளுடன் எழுதப்படுவதாகும். இப்புதினங்கள், தாம் எழுதப்படும் வட்டாரத்தின் மொழியிலேயே அமைந்திருப்பது சிறப்பு. வட்டாரப் புதினங்கள் தமிழகத்தின் பல்வேறு வட்டாரங்களை மையமாகக் கொண்டு எழுதப்பட்டவை . கொங்கு வட்டாரம், கரிசல் வட்டாரம், நாஞ்சில் வட்டாரம், நெல்லை வட்டாரம், முகவை வட்டாரம், மதுரை வட்டாரம், தஞ்சை வட்டாரம் எனத் தமிழக வட்டாரங்களை வகைப்படுத்தலாம்.
12th Std - Advance Tamil - Chaper - - :