நிகழ்த்தப்படும் கதைகள் திருவிழாக்காலங்களில் மட்டுமில்லாமல் பொ ழுதுபோக்கிற்காகவும் கூத்து நடைபெறும்போது இராமாயண, மகாபாரதக் கதைகளும் அதன் கிளைக்கதைகளும் நடத்தப்படுகின்றன. மாரியம்மன் கதை, நல்லதங்காள் கதை, கண்ணகி கதை முதலான கதைகளும் நிகழ்த்துகலைகளின் பல்வேறு வடிவங்களில் நிகழ்த்தப்படுகின்றன. கூத்தில் மகாபாரதக் கதைகள் இடம்பெறுவது போல ராமாயணக் கதைகளும் இடம்பெறுகின்றன. தஞ்சை மாவட்ட நார்த்தேவன் குடிக்காடு கூத்தில் இராமாயணம் இடம் பெறுகின்றது. இதில் ஒவ்வொரு பாத்திரமும் இரண்டிரண்டு பேரால் ஒரே நேரத்தில் நடிக்கப்படுவது அதன் சிறப்பு. இத்தகு நாட்டார் நிகழ்த்துகலைகளைப் பற்றி அறிந்துகொள்வது நமது பண்பாட்டு மரபை அறியும் தேவையாகும். இன்றைய காலம் உலகம் முழுவதும் ஒரே வகையான உணவு, உடை என மாறத்தொ டங்கிய பண்பாட்டினைப் பின்பற்றும் காலமாக மாறிவருகிறது. மண்சார்ந்தவற்றை, பண்பா டு சார்ந்தவற்றைப் பற்றிய அறிதலும் பயன்படுத்துதலும் குறைந்து வருகிறது. அழிந்துவரும் கலைகளாக இவை மாறும் சூழலிலிருந்து அவற்றை மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பை ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டியது மிகவும் இன்றியமையாதது ஆகும். 12th Std - Advance Tamil - Chaper - - :
📖 generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 164poem
நிகழ்த்தப்படும் கதைகள்
Chapter 69: படிப்போம் பயன்படுத்துவPோம் · ADVANCED TAMIL
Related topics
Have a question about this topic?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →