உங்களுக்குத் தெரியுமா? அறிவழகன்: கட்டாயம் தண்டனை உண்டு. ஆம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின்படி குற்றங்கள் உரிமையியல், குற்றவியல் என இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டன. நீதிமன்ற ஆணைகளுக்கும் தீர்ப்புகளுக்கும் கட்டுப்பட மறுப்பது உரிமையியல் வழக்காகவும் ஊடகங்களில் தவறான செய்திகளைப் பரப்புவது குற்றவியல் வழக்காகவும் பதிவு செய்யப்படும்.
குற்றம் உறுதிசெய்யப்பட்டால் ஆறுமாதம் சிறைத்தண்டனையோ, அபராதமோ விதிக்கப்படும். கலைமதி: அப்பப்பா… . ஊடகத்தில் பணியாற்றுபவர்கள் மிகக் கவனமாகத்தான் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் வெளியிட வேண்டும் போல் இருக்கிறதே. ஆமாம் ஐயா, அலுவலக இரகசியச் சட்டம் என்றீர்களே.
அப்படி என்றால் ஊடக அலுவலகத்தைப் பற்றிய ரகசியத்தை வெளியில் கூறக் கூடாதா? அறிவழகன் : அப்படி இல்லை. அரசு அலுவலகச் செயல்பாடுகளில் ரகசியமாக வைக்கப்படவேண்டிய சில தகவல்களை வெளியிடுவது சட்டப்படி குற்றமாகும். கயல்விழி: ரகசியமாக வைக்கப்பட வேண்டிய தகவல்கள் எவை என்று கூற முடியுமா?
ஐயா!. அறிவழகன்: ஊடகமானது நிகழ்வுகளை மக்களுக்கு வெளிப்படையாகக் காட்டும் கண்ணாடி என்ற நோக்கில் எல்லாவற்றையும் வெளியிடுதல் கூடாது. நாட்டின் பாதுகாப்பு, வெளிநாட்டுத் தொடர்பு, குற்றப் புலனாய்வு, அமைச்சரவை முடிவு போன்றவற்றை ரகசியமாக அறிந்து அவற்றை வெளியிடுவது பெரும்குற்றமாகும். இதைத் தடைசெய்ய ஆம் ஆண்டில் அலுவலக இரகசியங்கள் சட்டம் கொண்டுவரப்பட்டது.
சலீம்: இப்பொழுது புரிகிறது ஐயா, எல்லாவற்றையும் மக்களுக்கு ஊடகம் வெளிப்படையாகக் காட்டுதல் கூடாது என்பதை புரிந்துகொண்டோம். பாதுகாப்பு ரகசியங்களை எல்லாம் வெளியிட்டால் நாடு என்னாவது? சிலர் சில செய்தியை வெளிப்படுத்தும் பொழுதே ரகசிய தகவல்கள் வெளியாகி உள்ளன என்றெல்லாம் கூறுவார்களே. அவை தவறுதானே ஐயா!