உருபனியல் உருவாக்கி உருபனியல் உருவாக்கி (Morphological Generator) உருபன்களை இணைத்துச் சொற்களை உருவாக்கும் கருவியாகும். இதன் உள்ளீடு ஒரு வேர்ச்சொல்லும் அதனோடு குழும உருபன்களோ அதன் இலக்கண அமைப்புகளோ ஆகும். இது வேர்ச்சொல்லை யும் அதன் குழும உருபன்களையும் ஒன்றிணைத்துச் சொற்களை உருவாக்குகிறது. சான்றாக, ‘படி‘ என்ற வினைச்சொல் அதன் குழும உருபன்களோடு இணைந்து படிக்கிறான், படிப்பான், படித்தான், படித்து எனத் திணை, பால், காலம் போன்றவற்றின் அடிப்படையில் ஆயிரக்கணக்கான வினைவடிவங்களை உருவாக்கும்.
12th Std - Advance Tamil - Chaper - - :