உவர் - Over உப்பி மேலெழுந்தது உப்பு. உகப்பி மேலெழுந்தது உக – உகர் – உவர். இவ் ‘உவர்‘ மேலெழுதல் பொருளிலும் கூடுதல் பொருளிலும் இந்தோ ஐரோப்பியத்தில் உபர் – உபரியானது. கீழை இந்தோ ஐரோப்பியமாகிய சமற்கிருதத்தின் உபரியே மேலை இந்தோ ஐரோப்பிய மொழிகளில், Over என்பதற்கு வேர் என்பார் ஆங்கில வேர்ச்சொல் அகராதி அறிஞர் கீற்று.
(The Concise Dictionary of ENGLISH ETYMOLOGY – Walter W. Skeat) என்றெல்லாம் அழைக்கப்படும் பழந்தமிழ் மரபில் இந்த உண்மையைக் காணலாம். நிலத்திற்கு அடியில் மரம், செடி, கொடிகளைத் தாங்கி நிற்கும் ஓர் உறுப்பு, வேர். நிலத்தில் ஊன்றும்போது, சிறிதாக இருந்த இந்த உறுப்பு மெல்ல மெல்ல வியலித்து வளர்கிறது.
அதன் அடிப்படையிலேயே வியல் – வியர் – வேர் என இச்சொல் உருவானது. பெயர் – பேர் என்பதுபோல், வியர் – வேர் ஆனது. மரம், செடி, கொடிகளைத் தாங்கி, வியலித்து வளர்ந்து நிற்கின்ற நிலைத்திணை (தாவரங்கள்) களின் வேர்கள்போலவே , மொழியின் சொற்கள் பல வற்றையும் தாங்கி நிற்கின்ற மூலச்சொற்களை நாம் வேர்ச்சொற்கள் என்கிறோம். ஆங்கிலத்திலும் இவ்விரண்டின் வேரினையும் Root என்ற ஒரு சொல்லால் வழங்குவது குறிப்பிடத்தக்கது.