generic · 12th TN - English Medium · TAMIL · Page 169poem

18. வெஃகாமை

Chapter 9: 18. வெஃகாமை · TAMIL · TA medium

Read from the source

Complete lesson

. வெஃகாமை . நடுவுஇன்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக் குற்றமும் ஆங்கே தரும். . படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் நடுவன்மை நாணு பவர். . சிற்றின்பம் வெஃகி அறன்அல்ல செய்யாரே மற்றுஇன்பம் வேண்டு பவர். . இலம்என்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற புன்மைஇல் காட்சி யவர். . அஃகி அகன்ற அறிவுஎன்னாம் யார்மாட்டும் வெஃகி வெறிய செயின். . அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப் பொல்லாத சூழக் கெடும். . வேண்டற்க வெஃகிஆம் ஆக்கம்; விளைவயின் மாண்டற்கு அரிதாம் பயன். . அஃகாமை செல்வத்திற்கு யாதுஎனின் வெஃகாமை வேண்டும் பிறன்கைப் பொருள். . அறன்அறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும் திறன்அறிந்து ஆங்கே திரு. . இறல்ஈனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும் வேண்டாமை என்னும் செருக்கு.

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →