. உட்பகை - எளிய உரை . குளிர்ந்த நீரும் தீமை எனின் விருப்பத்தகா; உறவினர் குணங்களும் கேடுதரின் பிடிக்ககா. .
வாள்போல் கொடிய பகைக்கு அஞ்சவேண்டடாம்; உறவுபோல் நடிக்கும் உட்பகைக்கு அஞ்சுக. . உட்பகையிலிருந்து தன்னனைக் காத்துக்கொள்க; தளருங்ககால் மண்வவெட்டி போலச் சாய்ந்துவிடும். .
உள்ளம் ஒட்டடாத உட்பகை இருந்ததால் சுற்றம் ஒட்டடாதபடி பல துன்பம் தரும். . உறவு முறையில் பகை உண்டடாகின் சாகும்படியான பல துன்பம் தரும். .
கூட இருப்பவர்பபால் கூடாமை ஏற்படின் ஒருநாளும் அழிவிலிருந்து தப்ப முடியாது. . தவலையும் மூடியும்போலச் சேர்ந்திருந்ததாலும் உட்பகை உள்ள குடியினர் மனம் ஒன்றுபடார். .
உட்பகை உள்ளகுடி மெல்ல வலிகுறைந்து அரம் அராவிய இரும்புபோல் தேயும். . எள்ளின் பிளவுபோலச் சிறிதாக இருந்ததாலும் உட்பகையால் கேடு உண்டு. .
மனவொற்றுமை இல்லலாதவரோடு வாழ்தல் பெட்டியில் பாம்புடன் வாழ்வதைப் போலும்.