. கள் உண்ணணாமை - எளிய உரை . என்றும் கள்ளளாசை கொண்டு திரிபவர் வெட்கப்படார் மதிப்புக்குறைவர். .
கள் குடியற்க பெரியோரிடம் மதிப்புப் பெற விரும்பபாதார் வேண்டுமானால் குடிக்கட்டும். . கள்ளளாட்டம் தாய்க்கும் அருவருப்பபைத் தரும்; பெரியவர்க்கு என்ன ஆகும்? .
கள்குடிக்கும் தகாத பெருங்குற்றம் உடையவரை நாண் என்னும் நங்ககை விட்டுப் போவாள். . விலை கொடுத்தும் மெய்ம்மறதியை வாங்குதல் வாழத் தெரியாமையாகும். .
துஞ்சினவர் என்பவர் செத்தவரே; கள்ளுண்பவர் என்பவர் நஞ்சுண்பவரே. . கள்ளளை மூடிக்குடித்துக் கண் தடுமாறுபவரின் உள்ளத்ததை அறிந்துகொண்டு ஊர்சிரிக்கும். .
குடியை மறைக்கலாம் என்பதை விட்டொழி; மறைத்ததைக் குடி உடனே வெளியாக்கும். . குடிகாரனை ச் சொல்லித் திருத்துதல் குளத்தில் விழுந்தவனை விளக்ககால் தேடுதல் ஒக்கும். .
தான் குடியா நிலையில் குடித்தவனை க் காணின் தன் குடிமயக்கத்ததை ஒருவன் உணரமாட்டடானா? XII Std Tamil XII Std Tamil - - - - வான்புகழ் வள்ளுவரின் அறக்கருத்துகள் மாணவரிடம் சென்று சேர வேண்டும்; அதன்வழி நன்னனெறிப் பண்புகள் மாணவரிடையே வளர வேண்டும் என்ற நோக்கில் புதிய பாடத்திட்டத்தில் திருக்குறளின் பாக்கள் சேர்க்கப்பட்டுள்ளன. திருக்குறளை நாள்தோறும் வழிபாட்டுக் கூட்டத்தில் பொருளுடன் கூறலாம். நாள்தோறும் ஒரு திருக்குறளைப் பொருளுடன் பள்ளியின் தகவல்பலகையில் காட்சிப்படுத்தலாம்.
திருக்குறள் ஒப்பித்தல் போட்டியை வகுப்புவாரியாக நடத்தலாம். திருக்குறள் கலைவிழாக்கள், ஓவியக் கண்ககாட்சிகள், நாடக விழாக்கள், குறளின் பொருளை வாழ்வியல் அனுபவங்களோடு பொருத்துதல், குறளை இசையமைத்துப் பாடுதல் போன்ற நிகழ்வுகளைப் பள்ளிகளில் ஒருங்கிணை க்கலாம். இலக்கிய மன்றக் கூட்டங்களில் குறட்பபாக்கள் தொடர்பபான கதைகள் சொல்லலாம்; நாடகங்களை நடத்தலாம். குறட்பபாக்கள் தொடர்பபான வினாக்களைத் தொகுத்து " வினாடி வினா" நடத்தலாம்.
பள்ளி சார்ந்த அழைப்பிதழ்கள், பரிசுச் சான்றிதழ்களில் திருக்குறளை அச்சிட்டு வழங்கலாம். உலகப் பொதுமறையாம் திருக்குறளில் இடம்பபெற்றிருக்கும் நன்னனெறிக் கருத்துகளின் அடிப்படையில் நீதிக்கதைகள், இசைப்பபாடல்கள், சித்திரக் கதைகள், அசைவூட்டப் படங்கள் வாயிலாகத் திருக்குறள் வளங்களை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கலாம். குறிப்பு: மாணவர்கள் எளிதில் படித்துப் புரிந்துகொள்வதற்கு ஏற்றவகையில் குறட்பபாக்களின் சொற்கள் பிரித்துத் தரப்பட்டுள்ளன; அலகிடுவதற்கு அன்று.