📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Advanced Tamil · Page 121poem

(19ஆம் நூற்றாண்டின் இறுதி)

Chapter 2: அரங்கவியல் · Advanced Tamil

(19ஆம் நூற்றாண்டின் இறுதி) பாலாமணி அம்மையார் முதன் முதலாக முழுவதும் பெண்களே பங்கேற்ற ’பாலாமணி அம்மாள் நாடகக் குழு’ வினைத் தொடங்கி நடத்தியவர். இவரின் குழுவில் எழுபது பெண்கள் இருந்தனர். ’நாடகஅரசி’ எனச் சிறப்பிக்கப்பட்ட இவரது நாடகங்கள், சமுதாய சீர்திருத்தங்களையே உள்ளடக்கங்களாகக் கொண்டிருந்தன. நாடக மேடை யில் பெட்ரோமாக்ஸ் விளக்குகளை முதன்முதலில் அறிமுகப்படுத்தியவரும் இவரே. பாலாமணி அம்மையார் குறித்து, அவ்வை சண்முகம் ”எனது நாடக வாழ்க்கை” என்ற நூலில் கீழ்க்காணுமாறு எழுதியுள்ளார். “கும்பகோணத்தில் இரவு ஒன்பதரை மணிக்கு நாடகம் ஆரம்பமாகும். இதற்காகப் பார்வையாளர்களை ஏற்றிக் கொண்டு மாயவரத்திலிருந்து இரவு எட்டு மணிக்கு ஒரு ரயில் கும்பகோணத்திற்கு வரும். அதேபோல எட்டரை மணிக்குத் திருச்சியிலிருந்து ஒரு ரயில் வரும். அந்த ரயில்கள், கும்பகோணத்தில் நின்று விட்டு, இரவு மூன்று மணிக்கு மீண்டும் புறப்பட்டு, மாயவரத்துக்கும், திருச்சிக்கும் போய்விடும். பாலாமணி நாடகங்களைப் பார்க்க ரசிகர்களுக்காக ஆங்கில அரசு இத்தகைய சிறப்புத் தொடர்வண்டி விட்டது. அத்தொடர்வண்டியை, "பாலாமணி ஸ்பெஷல்' என்று அழைத்தனர்.”

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →