. குறியீடு கதையின் நிகழ்ச்சிப் போக்கு, கதைமாந்தரின் உள்ள உணர்வு போன்றவற்றை நேரடிச் சொற்களில் உரைப்பதைவிட, அந்தக் களத்தில் கிடைக்கிற குறியீடுகளைப் பயன்படுத்திச் சொல்லுதல் வலிமையான வெளிப்பாட்டுக்கு உதவும். ( எ. கா.
) “ அவன் கடற்கரையில் அமர்ந்திருந்தான். அவன் விரல்கள் புரிபடாத கோடுகளை மண லில் வரைந்து கொண்டிருந்தன. அலைகளின் பேரோசை காற்று வெளியெங்கும்.” இந்நிகழ்வில் கதைமா ந்தரின் மனப்போராட்டத்தை மண லில் வரைந்த விரல்களும் எழுந்து ஆர்ப்பரிக்கும் கடலின் பேரோசையும் நுட்பமாய் வெளிப்படுத்துவதை அறியலாம். இதில் மண லில் வரையும் விரல்களும் கடலின் ஓசையும் குறியீடுகள்.