அ ந்தச் சம்பவம் நடந்தது ஹஷிமாராவிலிருந்து வந்த மூன்றாம்மாதம். அதுவொரு சனிக்கிழமை.. அஷமஞ்சா பாபு அப்போ துதான் வேலையிலிருந்து திரும்பிவந்து, பழைய மரநாற்காலி ஒன்றில் உட்கார்ந்திருந்தார். கட்டிலையும் பிரம்பு முக்காலியையும் தவிர அந்த அறையில் இருந்த ஒரே மரச்சாமான் அதுதான்; அது திடீரென அவருக்கடியில் உடைந்து, கைகால்களைப் பரப்பியபடி அவரைத் தரைக்கு அனுப்பியது.
உண்மையில் அவருக்குப் பலமான அடி, சொல்லப்போனால் மரக்காலைப்போலத் தன் முழங்கையும் இடம்விட்டு நகர்ந்துவிட்டதோ என்று நினைக்கும்போது அந்த எதிர்பாராத சத்தம் வலியை மறக்கச் செய்துவிட்டது. அது படுக்கையிலிருந்து வந்தது. ஒரு சிரிப்ப லி அல்லது சரியாகச் சொல்லவேண்டுமென்றால் அதுவொரு இளிப்பு, அது தோன்றிய இடம் சந்தேகமே இல்லாமல் ப் ரௌனி, கட்டிலில் உட்கார்ந்திருந்த அதன் உதடுகள் இன்னமும் வளைந்திருந்தன. அஷமஞ்சா பாபுவுக்குப் பொதுஅறிவு சற்று விசாலமா க இருந்திருந்தால், நாய்கள் ஒருபோதும் சிரித்ததில்லை என்று தெரிந்திருக்கும்.
கொஞ்சமேனும் கற்பனைவளம் இருந்திருந்தால் இச்சம்பவம் அவர் தூக்கத்தைப் பறித்திருக்கும். இரண்டுமே அவரிடம் இல்லை என்பதால் அஷமஞ்சா பாபு All About Dogs என்ற புத்தகத்தோடு உட்கார்ந்து கொண்டிருந்தார். ஒரு மணிநேரம் தேடியும் அந்தப்புத்தகத்தில் சிரிக்கும் நாய் பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை. ஆனாலும் ப்ரௌனி சிரித்தது என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.
புத்தகத்தை மூடிவிட்டு ப் ரௌனியைப் பார்த்தார். அவர்களின் கண்கள் சந்தித்துக் கொண்டதும், ப் ரௌனி தன் முன்னங்காலை எடுத்துத் தலையணையில் வைத்து அவரைப்பார்த்து வாலாட்டியது, மூன்றுமாதத்தில் அதன் வால் ஒன்றரை இஞ்ச் வளர்ந்துவிட்டது. இது நடந்த ஒரு வாரத்திற்குள் இன்னும் இரண்டு நிகழ்ச்சிகளில் ப் ரௌனிக்குச் சிரிப்பதற்கான சந்தர்ப்பம் வாய்த்தது. முதலாவது இரவினில் நடந்தது.
ஒன்பதரை மணி வாக்கில். அஷமஞ்சா பாபு அப்போதுதான் ப் ரௌனி படுப்பதற்காக வெள்ளை விரிப்பொன்றைத் தரையில் விரித்திருந்தார். ஒரு கரப்பான்பூச்சி எங்கிருந்தோ பறந்து வந்து சுவரில் அமர்ந்தது. அஷமஞ்சா பாபு தன் செருப்பை எடுத்து அதன்மீது வீசினார்.
செருப்பு 11th Advance Tamil - - - :