- ஆர். சூடாமணி பார்வை மங்கியது. எதிரில் கிடந்த அம்மாவின் முகம் பனிப்படலத்தினூடே மொத்தையாய்த் தெளிவின்றித் தெரிந்தது. கண் டாக்டர், மருந்து போட்டுக் கண் பார்க்க விரித்து வைத்தால் இருக்குமே, அந்த மாதிரி.
கண்களைத் துடைத்துக் கொண்டேன். இந்தக் கண்ணீர் ஏதோ நிமோனியாவில் காய்ச்சல் தகிக்க ஆக்ஸிஜன் குழாயினால் மூச்சு விட்டுக் கொண்டு நினைவின்றிப் படுத்திருக்கும் அம்மாவுக்காக மட்டும்தானா? எனக்காகவும்தான். மற்றவருக்காக அழும்போ து அந்த அழுகை பெரும்பாலும் நமக்காகவேதான் இருக்கிறது.
நாம் அவருக்குச் செய்யத் தவறிய கடமை களுக்காக, அவரிடம் காட்டா த அனுதாபத்தக்காக, அவரைப் புரிந்துகொள்ளாமல் போனதற்காக. அம்மாவுக்கு மாநிறம். இப்போது காய்ச்சல் வேகத்தில் கறுப்பாகவே தெரிந்தாள். கரிய முகத்தில் ஜுரப் பளபளப்பு.
கரிய முடியில் தலை சாமான் வைத்துக் கட்டியது போல், வகிட்டையொட்டி நெற்றியின் மேல் விளிம்பில் இருபுறமும் வெள்ளை முடி. திலகமில்லாத வெறும் நெற்றி. எனக்கு நினைவு தெரிந்த நாளாக வெறுமையாய் இருந்து வரும் நெற்றி. டாக டர் இனி அதிக நம்பிக்கை இல்லை என்று சொல்லிவிட்டார்.
அதாவது, “பார்ப்போம் மிஸ்டர் கேசவன். நம்மாலான முயற்சியெல்லாம் செய்யறோம். காட் இஸ் க்ரேட்“ என்று சொன்னார். அறைக் கதவிடை சலனம்.
வேகமாய்த் திரும்பிப் பார்த்தேன். என் மனை விதான். என் முகம் விழுந்து விட்டதா? என் ஏமாற்றத்தை அவள் உணர்ந்திருக்க வேண்டும்.
“யாரை எதிர்பார்க்கிறீங்க?” “ம்? யாரையுமில்லே” “இந்த நேரத்துக்கு நான்தான் வருவேன்னு உங்களுக்குத் தெரியும்” “ஆமாம்” “பின்னே?“ “பின்னே? ஒண்ணுமில்லே“ “நாலுநாளா கவனிக்கிறேன். வீட்டிலேயும் சரி, இங்கேயும் சரி, அடிக்கடி வாசல் பக்கமே பாத்துக்கிட்டிருக்கீங்க.
யாரை எதிர்பார்க்கறீங்கன்னு நான் தெரிஞ்சுக்கக் கூடாதா?“ அவள் குரலில் சற்று சூடு உறைத்தது. நியாயம் இருக்கும் இடத்தில் சூடு அவசியம் இருக்கும். அன்பான மனை வி. முகம்கோணாமல் என் தாயைக் கவனித்துக் கொள்பவள்.
நான் யாரை எதிர்பார்க்கிறேன். யாருக்கு அம்மா உடல்நிலைபற்றி எழுதி அனுப்பியிருக்கிறேன் என்று அறிந்துகொள்ள அவளுக்கு உரிமையில்லையா என்ன? ஆனால், அது அம்மா வின் உரிமையில் குறுக்கிடுவதாயிருந்தால்? யாருக்கும் தம் அந்தரங்கத்துக்கான உரிமை உண்டல்லவா?
“முக்கியப்பட்ட யாருமில்லை நீலா“ என்று பொய் சொன்னேன். “இருந்தாலும் எனக்குச் சொல்றது! யாரது?“ “ எங்களோட ஒரு பழங்காலக் குடும்ப நண்பர். அப்பாவுக்கு ரொம்ப வேண்டியவர்.
சொந்தமின்னு அதிகமா யாருமில்லாத எங்களுக்கு, அவரை ஒரு சொந்தக்காராய் நினைச்சு, அம்மா முடியாமல் படுத்திருக்கிறதைத் தெரிவிச்சிருக்கேன். 11th Advance Tamil - - - :