📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Advanced Tamil · Page 137poem

பேச்சாற்றலின் வலிமை

Chapter 2: அரங்கவியல் · Advanced Tamil

பேச்சாற்றலின் வலிமை பிரிட்டன் நாட்டு முதன்மை அமைச்சராய் இருந்தவர் டிஸ்ரேலி. அவர், பொதுக்கூட்டங்களில் பேசிப் பழக்கமில்லாதவர். முதன்முதலில், அவையினர் முன் பேசுவதற்காக அவர் எழுந்தபோது, உடல் நடுங்கியது; நா குழறியது; பேச முடியாமல், உடல் வியர்த்து, அமைதியாக உட்கார்ந்துவிட்டார். அதனால், அவையினரின் ஏளனப்பார்வைக்கு ஆளானார். இருந்தபோதிலும், அவர் கூட்டத்தினரைப் பார்த்து, “நான் எனது பேச்சின்மூலம் வெற்றி பெறுவேன். என் பேச்சைக் கேட்பதற்காகவே நீங்கள் எல்லாரும் காத்துக்கொண்டு இருப்பீர்கள்“ எனச் சூளுரைத்தார். நாளடைவில், மிகச் சிறந்த பேச்சாளாராக மாறினார். ஒரு கருத்தைச் சார்ந்து, ஒட்டியும் வெட்டியும் பேசும் அவருடைய பேச்சு, அனைவரையும் கவர்ந்தது. உலகத்தின் மிகச் சிறந்த பேச்சாளர்களுள் ஒருவராக மதிக்கப்பட்டார். இருமுறை பிரிட்டன் நாட்டின் முதன்மை அமைச்சராகப் பதவியேற்றார்.

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →