📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Advanced Tamil · Page 135poem

பெரியாரின் இயல்பான பேச்சு

Chapter 2: அரங்கவியல் · Advanced Tamil

பெரியாரின் இயல்பான பேச்சு தமிழக வரலாற்றில் பல ஆண்டுகளாகச் சிந்தனை இன்றி உழன்ற மக்கள ச் சிந்திக்க வைத்து, பகுத்தறிவுடன்வாழ வழிகாட்டிய தலைவர் தந்தை பெரியார். ஏதென்ஸ் நகரில் சாக்ரடீஸ் எப்படி வீதி விதியாகச் சென்று, இளைஞர்களைத் தம்கருத்துகள் மூலம் சிந்திக்க வைத்தாரோ, அதே போன்று மிகப்பெரிய சிந்தனை எழுச்சியைத் தமிழ்நாட்டு வீதிகளில் ஏற்படுத்தியவர் தந்தை பெரியார். அவர் பேச்சில் இலக்கிய நயம் இருந்ததில்லை, இயல்பான பேச்சுத்தமிழில்தான் உரையாற்றுவார். ஆனால், அந்த இயல்பான பேச்சுத்தமிழ் மக்கள ச் சிந்திக்க வைத்தது. தமிழ்நாட்டில் அவர் ஏற்படுத்திய தாக்கம், அவர் உருவாக்கிய இயக்கம் அறிஞர்களை, தலைவர்களை, சிறந்த பேச்சாளர்களை மக்க ளுக்கு அடையாளம் காட்டியது. அவர்களுள் முதன்மையானவர் அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தால் ’அறிஞர்’ எனப் பட்டமளித்துச் சிறப்பிக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா.

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →