தலைப்பின் நFோக்கம் “இதழ்களை, அவற்றில் இடம்பெ றும் தலைப்புகளே துல்லியமாகக் கணிக்கின்றன“ என்று ஆலன் ஹோம் கோம்ப் கூறுகிறார். செய்தித் தலைப்பைச் செய்தித் தாளின் பலகணி என்பர். செய்தியின் சிறப்புத்தன்மைகளைக் கூறுதல், இன்றியமையாமையை உணர்த்துதல், படிப்பவர்களைக் கவர்தல், விற்பனையை உயர்த்துதல் ஆகியவை தலைப்பின் நோக்கங்களாகும். ‘ஊடகம் மக்களாட்சியின் நான்காவது தூண்’ என அழைக்கப்படுகின்றது. முதல் தூணாக அரசு நிருவாகமும் இரண்டாவது தூணாகப் பாராளுமன்றமும் சட்டமன்றமும் மூன்றாவது தூணாக நீதிமன்றமும் நான்காவது தூணாக ஊடகமும் குறிப்பிடப்படுகின்றன. மக்களின் அடிப்படை உரிமையான கருத்துரிமையைக் காத்தல், சமூகக் குற்றங்களை எதிர்த்தல், அரசுக்கு வழிகாட்டுதல், ஆலோசனைகளை வழங்குதல் போன்ற செய்திகளை வழங்குவதால் ஊடகம் நான்காவது தூணாகக் கருதப்படுகிறது.
📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Advanced Tamil · Page 191poem
தலைப்பின் நFோக்கம்
Chapter 2: அரங்கவியல் · Advanced Tamil
Related topics
Have a question about this topic?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →