📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Advanced Tamil · Page 198grammar_exercise

தமிழ் இதழ்கள் - ஒரு சந்திப்பு

Chapter 2: அரங்கவியல் · Advanced Tamil

தமிழ் இதழ்கள் - ஒரு சந்திப்பு ஊரே விழாக் கோலம் பூண்டிருந்தது. வழியெங்கும் வண்ணத் தோரணங்களும் விதவிதமா ன கோலங்களும் மனத்தை மகிழ்வித்தன. கவின், கடைத்தெரு வழியாகச் சென்றுகொண்டிருக்கிறான். அப்போ து பக்கத்து ஊரில் வசிக்கும் சிற்றப்பா மகள் கவிமதி எதிரே வருகிறாள் இருவரும் சந்தித்து உரையாடுகின்றனர்.

கவின்: கவிமதி! யாரைத் தேடுகிறாய்? கவிமதி: கவின் உன்னைத்தான் காணவந்தேன். உங்கள் ஊரில் திருவிழாவா?

கவின்: ஆம், புத்தகத் திருவிழா. கவிமதி: என்ன! புத்தகத் திருவிழாவா? உங்கள் ஊரில் புத்தகத் திருவிழா நடப்பதை நினைத்தால் மிகவும் பெருமையாக இருக்கிறது.

கவின்: சரி, வா, வீட்டிற்குச் செல்வோம். எங்கள் வீட்டில் உன்னைக் கண்டால் அனைவரும் மகிழ்வர். (இருவரும் பேசியபடி கடைத்தெருவழியே நடந்துசெல்கின்றனர். அப்போது யாரோ அழைப்பதுபோல் தோன்றியது.

இருவரும் அழைப்பு வந்த திசையினை நோக்கித் திரும்பினர். அழைத்தது எதிரே இருந்த புத்தகக்கடையில் மிடுக்குடன் அச்சின் வாசனையோடு, புத்தம் புதியதாகப் படபடத்துக் கொண்டிருந்தது ஒரு நாளிதழ். அது யாரும் எதிர்பாராத நேரத்தில் சட்டெனப் பேசத் தொடங்கியது) நாளிதழ்: நண்பர்களே! இங்கு வாருங்கள்.

கவின்: என்ன! எங்களை அழைத்தது நீயா? எதற்காக அழைத்தாய் நாளிதழே? நாளிதழ்: நானும் பல நாளாக உங்களின் நட்பிற்காகக் காத்திருக்கிறேன்.

நீங்கள்தாம் என்னுடன் பேசாமலும் என்னைப் புரட்டாம லும் உங்கள் போக்கில் சென்று கொண்டிருக்கிறீர்கள். கவிமதி: நாங்கள் ஏன் உன்னுடன் பேச வேண்டும்? நாளிதழ்: அன்றாடம் நடைபெ றும் நாட்டுநடப்புகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன். என் வரிகளை நீங்கள் மேலிருந்து கீழாய் வாசித்தால் நான் உங்களைக் கீழிருந்து மேலாய் உயர்த்துவேன் தெரியுமா?

இதனால் நமக்குள் நல்ல நட்பு மலர்வதுடன் உங்கள் அறிவாற்றலும் வளரும். கவிமதி: எப்படி? நாளிதழ்: என்னை வாசித்தால் நீங்கள் திறம்பட ச் சிந்திப்பீர்கள். உலகின் பல இடங்களில் நடைபெ றும் நிகழ்வுகள், அறிவியல் செய்திகள், பொருளியல் செய்திகள், விளையாட்டுச் செய்திகள், திரைப்படச் செய்திகள், கருத்துப்படங்கள், கல்விச் செய்திகள் முதலானவற்றை என்னிடமிருந்து உங்களால் பெற இயலும்.

கவின்: எங்கள் ஆசிரியர் சொல் விளையாட்டு ஒன்றை உருவாக்கி வரும்படி என்னிடம் கூறினார். அதற்கான வழிமுறையினை உன்னால் கூற இயலுமா? நாளிதழ்: சொல் விளையாட்டிற்கான வழிமுறையினை இணைப்பு இதழாய் வெளிவரும் என் மகளாகிய சிறுவர் இதழில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாமே! கவிமதி: சிறுவர் இதழில் வேறு என்னவெல்லாம் தெரிந்துகொள்ளலாம் ?

நாளிதழ்: சிறுவர் இதழில் சிறுவர்களுக்கான நன்னெறிக் கதைகள், 11th Advance Tamil - - - :

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →