📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Advanced Tamil · Page 147grammar_exercise

தண்டியலங்காரம்

Chapter 2: அரங்கவியல் · Advanced Tamil

தண்டியலங்காரம் தமிழில் அணியிலக்கணம் கூறும் நூல்களுள் தண்டியலங்காரம் முதல் நூலாகும். தண்டி என்பவரால் வடம ழியிலுள்ள காவ்யதர்சம் என்னும் நூலைத்தழுவி, இந்நூல் எழுதப்பெற்றது. இந்நூல் பொதுவணியியல், பொருளணியியல், சொல்லணியியல் என்னும் இயல்களையும், நூற்பாக்களையும் கொண்டுள்ளது. பொதுவணியியலில் செய்யுள் வகை, அதன் இலக்கணம் ஆகியவை சொல்லப்பட்டுள்ளன.

பொருளணியியலில், தன்மையணி முதல் பாவிகவணி வரை அணிகளின் இலக்கணமும் கூறப்ப ட்டுள்ளன. சொல்லணியியலில் மடக்கின் வகைகள், அவற்றின் இலக்கணம், சித்திரகவிகளின் இலக்கணம், வழு, வழுவமைதி ஆகியவை சொல்லப்பட்டுள்ளன. பெருங்காப்பியத்தின் இலக்கணமும் இந்நூலுள் குறிப்பிடப்ப ட்டுள்ளது. இந்நூலுக்குப் பின்னர், சந்திராலோகம், குவலாயனந்தம், மாற னலங்காரம் போன்ற அணியிலக்கண நூல்கள் தோன்றியுள்ளன.

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →