தெருக்கூத்தில் கட்டியக்காரன் அழைப்பதற்கு உதவியாக இருக்கும். இதனைக் களரிகட்டுதல் என்பர். தென்னாற்காடு மாவட்டத்தில் இதனைத் தாளக்கட்டு என்பர். களரி கட்டுக்குப் பிறகு, பார்வையாளர்கள் முன் தோன்றுகிற, குறிப்பிடத்தக்க முதல் கதைமா ந்தனைக் கட்டியக்காரன் என அழைக்கிறோம். கட்டியக்காரன், கூத்துக்களில் தன்னை அறிமுகப்படுத்துவதுடன் அவையோரை ஆயத்தம் செய்தல், கதைமா ந்தர்களை அறிமுகப்படுத்தல், கதையை விளக்குதல், கதைமா ந்தர்களுக்கிடையே தொடர்பை ஏற்படுத்துதல், கூத்தின் ஒழுங்கமைப்பையும் காட்சி நிகழ்வுகளையும் எடுத்துக்கூறல், முக்கியத்துவம் மிகுந்த கதைமாந்தர்களுடன் உரையாடுதல், விமர்சனம் செய்தல், பார்வையாளர்களுடன் ஊடாடுதல் போன்ற செயற்பாடுகளைச் செய்யும் கதைமாந்தன் ஆவான். கூத்தில் இவனது நடிப்பும் பாடலும் அனைவரது கவனத்தையும் ஈர்க்கக்கூடியதாக அமையும். கட்டியக்காரன், தெருக்கூத்தைக் கட்டியாள்பவனாகக் கூத்தின் தொடக்கம் முதல் இறுதிவரை இயங்குவான். இவன், கதையின் முக்கிய கதை மாந்தர்களையும் அவர்களது
📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Advanced Tamil · Page 117poem
தெருக்கூத்தில் கட்டியக்காரன்
Chapter 2: அரங்கவியல் · Advanced Tamil
Related topics
Have a question about this topic?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →