தொடரமைப்பில் ஆகுபெயர் நாம் பேசும்போ து, இயல்பாகவே நம்மையறியாமல் இலக்கணக்கூறுகளைப் பயன்படுத்திப் பேசுகிறோம். எடுத்துக்காட்டாக ஆகுபெயரைக் கூறலாம். கீழ்க்காணும் உரையாடல்கள ப் படித்துப்பாருங்கள். அவற்றுள் ஆகுபெயர் இடம்பெற்றுள்ளதனை அறிந்துகொள்வீர்கள்.
(வீட்டில். . .) அம்மா : கண்ணா, பள்ளிக்கு நேரமாகவில்லையா? கண்ணன் : அம்மா, இன்று பள்ளிக்கு விடுமுறை.
(பேருந்து நிறுத்தத்தில். . .) ஒருவர் : ஐயா, சென்றுவிட்டதா? மற்றொருவர் : இன்னும் வரவில்லை.
(பேருந்தில். . .) நடத்துநர்: காந்தி மண்டபம் யாரு? இறங்குங்க.
(அலுவலகத்தில். . .) மேலாளர் : அந்த நீலச்சட்டை இன்னும் வரவில்லையா? (பள்ளியில்.
. .) முகிலன்: மதி, பாரதியாரைப் படித்துவிட்டாயா? மதியழகன் : ஓ! படித்துவிட்டேனே !
மேற்கண்ட உரையாடல்களில், பள்ளிக்கு விடுமுறை என்பது, பள்ளியைக் குறிக்காமல், அங்குப் படிக்கும் மாணாக்கருக்கு விடுமுறை என்பதனைக் குறிக்கிறது. இஃது, இடவாகுபெயர். இதுபோலவே மற்ற தொடர்களிலுள்ள ஆகுபெயர்களையும் கண்டறியுங்கள். ஆகுபெயர் என்பது, ஒரு பொருளின் இயற்பெயர், அதனைக் குறிக்காமல் அதனொடு தொடர்புடைய மற்றொரு பொருளுக்கு ஆகி வருவதாகும்.
ஆகுபெயர் குறித்தும் அதன் வகைகள் குறித்தும் ஏற்கெனவே படித்திருக்கிறீர்கள். அவற்றை நினைவு கூருங்கள். தமிழில் ஆகுபெயர், தொடரியல் இலக்கணத்துடன் தொடர்புடையதாக உள்ளது. பெயர்கள் தொடரிலிருந்து வருவிக்கப்படுவதனால், அவற்றை வேற்றுமை மயங்கியலில் தொல்காப்பியர் அமைத்துள்ளார்.