தொல்காப்பியம் காட்டும் தொடரமைப்புகள் நாம் பிறரிடம் பேசும்போ து, தொடர்களாகத்தான் பேசுகிறோம். நாம் பயன்படுத்தும் தொடர்களில் இயல்பாகவே இலக்கணக்கூறுகள் அமைந்துள்ளன. அவற்றைத் தொல்காப்பியம் சில நூற்பாக்களில் சுட்டிக்காட்டியுள்ளது. அத்தகைய தொடரமைப்புகள், பின்வரும் தலைப்புகளில் கொடுக்கப்பட்டுள்ளன.
அவற்றை விளக்குவதற்கான எடுத்துக்காட்டுகள், இலக்கியத்திலிருந்தும் நடைமுறை வழக்கிலிருந்தும் எடுத்தாளப்பட்டுள்ளன. • தொடரில் சொற்கள் அமைந்துவரும் நிலை • திணை – பால் – எண் - தொடர்ப்பொருத்தம் • ஒரு சொல் அல்லது தொடர் அடுக்கி வருதல் • ஒரு தொடரை அடிப்படையாகக்கொண்டு செருகலும் விரித்தலும் • தொடரில் முன் பின் மாற்றம் • ஒரு தொடரை இரு வகையாக விளக்குதல் • இலக்கணக்கூறு நோக்கில் மாற்றம் – தோன்றா எழுவாய் • தொடரமைப்பில் ஆகுபெயர்