தோன்றா எழுவாய் இலக்கணக்கூற்றின் அடிப்படையிலும் தொடரில் மாற்றம் ஏற்படும். எடுத்துக்காட்டாகத் திண்ணை மெழுகிற்று என்னும் தொடரைக் கூறலாம். இத்தொடரில் எழுவாய் இல்லை. ஆயினும், இத்தொடரிலுள்ள செயப்படுபொருளே (திண்ணை) எழுவாயாக வந்துள்ளது.
உண்மையில், நான் திண்ணையை மெழுகினேன் என்பதே சொல்லப்பட வேண்டிய தொடர். ஆனால், திண்ணை மெழுகிற்று எனக் கூறும்போது, நான் என்னும் எழுவாய் வெளிப்படையாக இல்லை. எழுவாய் மறைந்து வருவதனால், அதனைத் தோன்றா எழுவாய் எனக் குறிப்பர். மேலும், திண்ணை மெழுகப்பட்டது எனச் செயப்பாட்டு வினைத்தொடராக அமையும்போ து, திண்ணை என்பது, எழுவாயாக அமைகிறது.
ஆகவே, செயப்பாட்டு வினை இல்லாமலே செயப்படுபொருள், எழுவாயாக வரும் என்பதைத் திண்ணை மெழுகிற்று என்னும் தொடர் விளக்குகிறது. மேலும் சில எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு: முள் குத்திற்று, வாள் வெட்டிற்று, எழுதுகோல் எழுதிற்று, கல் தடுக்கிற்று ஆகியனவற்றைக் கூறலாம். இக்கருத்தைச்