📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Advanced Tamil · Page 216question

எழுத்தாளர் சுஜாதா

Chapter 2: அரங்கவியல் · Advanced Tamil

எழுத்தாளர் சுஜாதா செய்தித்தாள் வாசித்தல் என்பது, நன்கு படித்தவர்களுக்கான செயல் என்கிற காலம்மாறிச் சற்றே தமிழ் தெரிந்தவர்களும் படிக்குமாறு தமிழை எளிமைப்படுத்தி, கொஞ்சம் பரபரப்புச் சேர்த்து, குழப்பம் இல்லாத வகையில் செய்தியைத் தரும் உத்தியைத் தமிழ்நாட்டில் முதலில் கொண்டுவந்தவர் ஆதித்தனார். அவர், எழுத்துநடை குறித்துப் பத்திரிகை எழுத்தாளர் கையேடு என்ற பெயரில் ஒரு வழிகாட்டி நூலை வெளியிட்டிருக்கிறார். பேச்சுத்தமிழைக் கொச்சை நீக்கி எழுது என்பதே இக்கையேட்டின் பொன்விதி. ‘நான்மாடக்கூடலை நண்ணினோம்‘ என்று சொல்வதற்குப் பதில் ‘மதுரைக்குப் போனோம்‘ என்று சொல்லவேண்டும்.

புரிகிற தமிழில் மட்டும் எழுதினால் போதாது, பேசுகிற தமிழில் எழுதவேண்டும். ஆதித்தனார் எழுத்துக்கூட்டிப் படிப்பவர்களையும் மனத்தில் வைத்துத்தான் இதழ் நடத்தினார். ஆகவேதான், கலைச்ச ற்களைத் தவிர்த்துப் பேச்சுமொழிச்ச ற்களை மிகுதியாகப் பயன்படுத்தினார். ”செந்தமிழில் எழுதுவது பெருமையாகக் கருதப்படுகிறது.

அவ்வாறு நாளிதழில் எழுதினால் அது பலருக்குப் புரியாது. பேச்சுத்தமிழையே எழுதவேண்டும். இதுவே தமிழ் உரைநடை வளர்ச்சிக்கு ஒரு நாளிதழ் செய்யவேண்டிய தொண்டு’’ என்று ஆதித்தனார் குறிப்பிட்டுள்ளார். சி.பா.

ஆதித்தனாரின் பத்திரிகை எழுத்தாளர் கையேட்டிலிருந்து ... கள்ள ரூபாய் நோட்டுச் செய்தியை எழுதும்போது 'கத்தை கத்தையாக நோட்டு அச்சடிப்பு' என்றும் அரசாங்கம் நோட்டு அச்சடிக்கும்போது 'கோடிக்கணக்கில் ரூபாய்நோட்டு அச்சடிப்பு' என்றும் சொல்லவேண்டும். மாவட்டத் தலைநகரங்களில் உள்ள தலைமை ஆஸ்பத்திரியைப் 'பெரிய ஆஸ்பத்திரி' என்று எழுதவேண்டும். மாஜி மந்திரி சேலம் ஜில்லாவுக்கு வருகை தந்தபோது இந்தப் பிரச்சினை சீக்கிரமே விவாதிக்கப்படும் என்றும் ஹர்த்தால் அனுஷ்டிக்கக்கூடாது என்றும், பாரபட்சமற்ற லெவி உத்தியோகஸ்தர்களுக்குப் போலிஸ் பந்தோபஸ்து அளிக்கப்படும் என்றும் சொன்னார்.

மேலே குறிப்பிட்டிருக்கும் தொடரை ஆதித்தனாரின் கையேட்டின்படி திருத்தினால், 'முன்னாள் அமைச்சர் சேலம் மாவட்டத்திற்கு வந்தார், இந்தச் சிக்கல் விரைவில் தீர்ந்துவிடும், கடையடைப்பு கூடாது. ஒருதலையாக இல்லாமல் கொள்முதல் அதிகாரிகளுக்குக் காவல் பாதுகாப்புத் தரப்படும்.' இவ்வாறு அவர் சொன்னார் என்று மாறும். செய்வினையில் எழுத வேண்டும். 'காரால் மோதப்பட்டு கிழவி சாவு' – தவறு 'கார் மோதி கிழவி சாவு' – சரி ஒரு வாக்கியத்தை எந்த இடத்தில் நிறுத்திப் படித்தாலும் தவறான பொருள் கொடுக்கும்படி எழுதக்கூடாது.

'உணவு அமைச்சர் மண்டையைப் பிளக்கும் வெயிலில் துறைமுகத்தைச் சுற்றிப் பார்த்தார்.' – தவறு 'மண்டையைப் பிளக்கும் வெயிலில் உணவு அமைச்சர் துறைமுகத்தைச் சுற்றிப் பார்த்தார்.' - சரி தலைப்பில் கூடியவரை ஒரே கதாநாயகன் அல்லது நாயகிதான் இருக்கவேண்டும். சுப்பிரமணியம் மனைவி மகளுடன் அமெரிக்கா போவதற்குப் பதிலாக சுப்பிரமணியம் அமெரிக்கா போகிறார். மனைவியையும் அழைத்துச் செல்கிறார் என்று இரண்டாகப் பிரிப்பது நல்லது.

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →