- எஸ்.ராமகிருஷ்ணன் மரபான கதைசொல்லலில் நவீனப் புனைகதையின் வடிவத்தை இணைத்துக் குறுகிய வடிவில் தரும் முயற்சியே குறுங்கதை. சி.எல்.பி. பள்ளியின் மைதானத்தில் தனது பன்னிரண்டு வயதில் தொலைத்த பந்தைத் தேடி, அறுபத்து ஏழாவது வயதில் ஊருக்குச் சென்றார் நாராயணன். அதைப்பற்றி யாரிடமும் சொல்லவில்லை என்ற போதும் மனது அந்தப் பந்தை எப்படியாவது கண்டுபிடித்துவிட வேண்டும் என்பதில் அக்கறையாக இருந்தது.
அந்தப் பந்தை அவர் அடித்தபோது மாலை நான்கு மணியிருக்கும். ரப்பர் பந்து பறந்து வேப்பமரத்தின் பின்னால் போய் விழுந்தது. பின்பு அது எவர் கண்ணிலும் படவே யில்லை. என்னவாகியிருக்கும்.
யாராவது பந்தை எடுத்திருப்பார்கள். அல்லது அருகிலுள்ள கிணற்றினுள் விழுந்து கிடந்திருக்கக்கூடும். மரக்கிளையில் சிக்கி நின்றிருக்கவும் சாத்தியமுண்டு. அல்லது வானில் இருந்து அரூபத்தின் கை ஒன்று அந்தப் பந்தைப் பறித்துத் தனதாக்கிக் கொண்டிருக்கவேண்டும்.
இந்த நான்கில் அரூபத்தின் கையைத்தான் அவர் அதிகம் நம்பினார். மைதானத்தில் தன்னுடைய பந்தைத் 11th Advance Tamil - - - :