கற்பனை உரையாடல் இடம்: சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர் உரையாடுவோர்: அமுதா, அந்தோணி, அப்துல்லா இவர்களுடன் அகராதி அகராதி: மாணாக்க ர்களே! என்ன தேடுகிறீர்கள்? அமுதா: எங்கிருந்து வருகிறது குரல்? (அமுதா, அந்தோணி, அப்துல்லா ஆகிய மூவரும் சுற்றும்முற்றும் பார்க்கின்றனர்) .
அகராதி: நான்தான் அகராதி பேசுகிறேன். உங்களுக்கு என்ன வேண்டும்? அந்தோணி: ஓ! பேசும் அகராதியா, மிக்க மகிழ்ச்சி.
எங்களுக்குக் ‘குவலயம்’ என்னும் சொல்லுக்குப் பொருள் வேண்டும். அகராதி: குவலயம் என்றால் உலகம். வையம், ஞாலம், புவி, புவனம், அகிலம், அண்டம், பார், தரணி, பூமி ஆகிய சொற்களும் உலகம் என்னும் பொருளைத்தான் குறிக்கின்றன. அப்துல்லா: அப்படியா!
வியப்பாக உள்ளதே! உலகம் என்பதற்கு இத்தனை சொற்கள் இருக்கின்றனவா! அகராதியே! உன்னைப்பற்றித் தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளோம்.
உன் தோற்றம் குறித்துச் சொல்வாயா? அகராதி: ஓ! சொல்வேனே! அகரம், ஆதி என்னும் இரு சொற்களின் சேர்க்கையே நான்.
ஆதி என்பதற்கு முதல் என்னும் பொருளும் உண்டு. ஒரு மொழியிலுள்ள எல்லாச் சொற்களையும் அகர வரிசையில் அமையும்படி தொகுத்து விளக்கும் நூல்தான் நான். என்னை அகரமுதலி எனவும் கூறுவர். அமுதா: அகராதியே!
அயல்நாட்டவர்தாம் உன்னைத் தமிழுக்கு அறிமுகம் செய்தனரா? அகராதி: இல்லை! இல்லை! தமிழில் சொல்லுக்குச் சொல் பொருள் விளக்கம் செய்யும்முறை தொல்காப்பியர் காலத்திலேயே தொடங்கிவிட்டது.
தொல்காப்பியர், உரியியலில் பல சொற்களுக்குப் பொருள் விளக்கம் தந்துள்ளார் என்பது உங்களுக்குத் தெரியுமா? அந் தோணி: அப்படியா! எங்களுக்குத் தெரியாதே. சரி, இதற்கு ஓர் எடுத்துக்காட்டைச் சொல்லேன்.
அகராதி: மாணாக்க ர்களே! தொல்காப்பியர், ‘செழுமை வளனும் கொழுப்பும் ஆகும் ‘ என்ற நூற்பா மூலம் எளிதாகப் பொருள் விளக்கம் தருகிறார். அஃதாவது, செழுமை என்பது, வளமையை யும் கொழுப்பு என்னும் பண்பையும் குறித்து வரும். மற்றோர் எடுத்துக்காட்டும் கூறுகிறேன்.
கேளுங்கள். ‘ ஐ வியப்பாகும் ‘ என்பது ஒரு நூற்பா. குழந்தைகள் வியப்பிற்குரிய பொருளைக் கண்டால் ‘ ஐ ’ யென ஒலி எழுப்புவது இயற்கையல்லவா? இந்த உரிச்ச ல்லுக்குத்தான் தொல்காப்பியர் பொருள் விளக்கம் தருகிறார்.
அப்துல்லா: ஓ! அப்படியென்றால், தொல்காப்பியர் காலத்திலேயே சொல்லுக்குப் 11th Advance Tamil - - - :