📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Advanced Tamil · Page 136poem

குன்றக்குடி அடிகளார்

Chapter 2: அரங்கவியல் · Advanced Tamil

குன்றக்குடி அடிகளார் குன்றக்குடி அடிகளார் ஓர் ஆன்மீகவாதி. அறிவு பற்றிய பரந்த நோக்கினை ஆழ்மனச் சிந்தனையோடு அவரது பேச்சாற்றல் பதியச்செய்கிறது. “ மக்களா கப் பிறந்தோர், இயற்கை வழங்கிய அறிவு வாயில்களைப் பயன்படுத்தி, மக்களுக்குரிய தகுதியினைப் பெறுதல் வேண்டும். வாழ்க்கையின் இலட்சியமே மக்கள அறிவு நலமுடையராக்குதலும் பண்பு நலமுடையோராக்குதலுமே. இவ்விரண்டு குறிக்கோளும் இன்று அடையத்தக்க வழியில் மக்களுடைய வாழ்க்கை நடைமுறை இல்லை. ஆறு அறிவுடையவன் மனிதன்; அறிவு ஒரு கருவி; அறிவுடையவன் எல்லாம் உடையவன்; அவன் ஆவது அறிவான். செய்திகளைச் சேகரிப்பதுதான் அறிவா? நூலறிவு அறிவின் அளவுகோலா? ‘வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே’ என்பார் மா ணிக்கவாசகர் அறிவார்ந்த ஆள்வினையோடு வாழ்தல் வேண்டும். . வாழ்வதன்வழி முதல் அறிவு பெறுகிறான். . செய்யும் தொழிலின் மூலம் இரண்டாம் நிலை அறிவு பெறுகிறான். . தான்வாழும் காலத்தின் சூழ்நிலைத்தாக்கத்திலிருந்து காத்துக்கொள்வதன் மூலம் மூன்றாம் அறிவு பெறுகிறான். . நல்ல நூல்களைத் தேர்ந்து கற்பதன்வழி நான்காவது அறிவு பெறுகிறான். பட்டறிவு நூல்களைப் படிப்பது நம் காலத்தை மிச்சப்படுத்தும். . கலந்து கேட்டுப் பேசிப் பழகி, அதன் வழி பெறும் அறிவு ஐந்தாம் நிலையாகும். . இயற்கை இயக்கத்தின் மூலம் பெறும் அறிவு ஆறாவது அறிவாம். உடல் மனநலத்தைக் கெடுத்து இயக்க ஆற்றலைக் குறைப்ப து கிரணம் எனும் உண்மையையும் ஓசோன் சார்ந்து சுறுசுறுப்பையும் உயிரியக்கத்தையும் 11th Advance Tamil - - - :

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →