📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Advanced Tamil · Page 130grammar_exercise

குரலும் மொழியும்

Chapter 2: அரங்கவியல் · Advanced Tamil

குரலும் மொழியும் • குரல்வளம் சிறப்பாக இருந்தால் பேச்சின் நடைநலமும் சிறக்கும். • ஒரே குரலில் சீராகப் பேசுவது பார்வையாளருக்கு விரைவில் சலிப்பை ஏற்படுத்திவிடும். • பேசும் கருத்திற்கு ஏற்ற உணர்ச்சியை வெளிப்படுத்துவதாகப் பேச்சின் வெளிப்பாடு இருக்க வேண்டும். மிகை உணர்ச்சி வெளிப்பாடுகளோ, உணர்ச்சியற்ற பேச்சோ இரண்டுமே தவிர்க்கப்பட வேண்டியவை.

• உச்சரிப்பில் தெளிவும் பேச்சில் உரிய ஏற்ற இறக்கமும் அமைந்திருத்தல் அவசியம். • பேசும் மொழியைப் பிழையில்லாமல் ஒலிக்கப் பழகிக்கொள்ள வேண்டும். பிழையான ஒலிப்பு, பேச்சையும் பேச்சாளரையும் நகைப்புக்குள்ளாக்கிவிடும். • உச்சரிப்புப் பிழையின்மை, மொழியழகு, சொற்குற்றம் இன்மை, சொல்லாட்சித் திறமை ஆகியனவற்றையும் கருத்தில் கொள்ளுதல் வேண்டும்.

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →