- ஹெச்.ஜி. ரசூல் இங்கு நவீனத் தமிழ்க் கதையின் புதிய வடிவமான நுண்கதைகள் தரப்பட்டுள்ளன. கவிதை, கதை, நாவலுக்குமான வரையறைகளை அழித்துத் தொடக்கம், நடு, முடிவு என்றேதுமில்லா நேரற்ற வரிசை கொண்டவை நுண்கதைகள். இவை வேடிக்கை, விநோதம், பகடி, குறியீடு ஆகிய அம்சங்கள் நிறைந்தவை.
மேலும், கவித்துவ மொழியையும் மெய்யியல் உள்ளடக்கத்தையும் கொண்டவை. அதிகாலை வரவேற்று ஒரு கவிதையை வாசித்தது. பூவின் இதழ்களிலும் புல்லின் நுனியிலும் உட்கார்ந்திருந்த பனித்துளி தன்னில் பிரபஞ்சத்தைப் பிரதிபலித்துக் கொண்டிருந்தது. குழந்தைகள் விளையாட்டுப் போக்கில் ஊதிப் பறத்திவிடும் குமிழியாகவும் அது இல்லை.
இருள் விலகத் தொடங்கியபோது, கர்வத்தோடு அருகே வந்த இளவெயில் சொன்னது. உன்னை நான் சாப்பிடப் போகிறேன். எதுவும் பேசாமல் மவுனம் காத்தது பனித்துளி. துளியாய் இருந்தபோது என்னைத் தொந்தரவு செய்தாய்.
ஆவியாகிக் காற்றில் கரைந்துவிட்டேன். இப்போது என்னை நீ என்ன செய்யமுடியும்?