இதழ் உருவாக்கம் இதழாசிரியர்கள், செய்திகளின் முதன்மை கருதி எந்தச் செய்தியை எந்தப் பக்கத்தில் வெளியிடுவது என்று முடிவு செய்து இதழை வடிவமைப்பர். இதழ் சிறப்பான முறையிலும் குறித்த நேரத்திலும் வெளிவர வேண்டுமெனில் மாதிரித் திட்ட வரைவினை உருவாக்குவர். இந்த மாதிரித் திட்ட வரைவைச் செய்தியின் கட்டமைப்பு முறை என்பர். செய்தியின் மதிப்பை உயர்த்துவதில் இக்கட்டமைப்பு முறை சிறப்பான இடத்தைப் பெறுகிறது. படிப்பவர்களின் உள்ளங்களைக் கவரும்வண்ணம் இதழ் கட்டமைப்பு இருத்தல் வேண்டும். ஒரு செய்தியின் வலிமையான கட்டமைப்பை நான்கு காரணிகள் உறுதிசெய்கின்றன. அவையாவன: . செய்தி எழுதுவதற்குக் கிடைக்கும் நேரம். . செய்தியின் உருவ அமைப்பு. . செய்தித்தாளில் அவற்றை வெளியிடுவதற்குக் கிடைக்கும் இடம். . செய்தி எழுதுபவரின் திறமை .
📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Advanced Tamil · Page 191poem
இதழ் உருவாக்கம்
Chapter 2: அரங்கவியல் · Advanced Tamil
Related topics
Have a question about this topic?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →