📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Advanced Tamil · Page 194poem

இதழ்களின் மொழிநடை

Chapter 2: அரங்கவியல் · Advanced Tamil

இதழ்களின் மொழிநடை ஓர் இதழுக்குச் சிறப்பு சேர்ப்பனவற்றுள் முதன்மையானது, அதனுடைய மொழி நடையாகும். சிறப்பான மொழிநடை மக்கள வெகுவாக ஈர்க்கிறது. நாம் மற்றவர்களோடு பேசுவதற்குப் பயன்படுத்துவது பேச்சுத் தமிழாகும். விளம்பரத்திற்காகக் கையாளும் தமிழ், அழகாகவும் செறிவாகவும் இருக்கும். மேடை ஏறி முழங்கும் பேச்சாளர்கள் சிலர், பயன்படுத்தும் நடை இலக்கிய நயத்துடன் இருக்கும். மொழிநடை பொருளுக்கேற்பவும் வேறுபடுகிறது. பெரும்புலவர்கள் எழுதுகின்ற இலக்கியக் கட்டுரைகள் சொற்செறிவுடன் அமைந்திருக்கும். இதழ்களில் இடம்பெறும் புனைகதைகளில், அணி சேர்க்கும் அடைம ழிகளும் உவமைகளும் கையாளப்படும். சிறுகதைகளில் சொற்கள் சிக்கனமாகப் பயன்படுத்தப்படும். இதுபோலவே படிக்கத்தெரிந்தவர்கள் அனைவரும் எளிதாகப் படித்துப் புரிந்துகொள்ளும் வகையில் இதழ்களில் மொழிநடை அமைந்திருக்கும்.

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →