📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Advanced Tamil · Page 132grammar_exercise

இலக்கியங்களில் பட்டிமன்றம்

Chapter 2: அரங்கவியல் · Advanced Tamil

இலக்கியங்களில் பட்டிமன்றம் தற்காலத்தில் ’பட்டிமன்றம்’ என்று அழைக்கப்படுவது, முன்பு ‘பட்டிமண்டபம்’ என்று அழைக்கப்பட்டது. பட்டிமண்டபம் என்ற சொல் சிலப்பதிகாரம், மணிமேகலை, திருவாசகம், கம்பராமா யணம் முதலான நூல்களில் காணப்படுகிறது. சிலப்பதிகாரத்தில், “வேந்தன் பகைப்புறத்துக் கொடுத்த பட்டிமண்டபம்” ( - ) எனவும் மணிமேகலையில் “ பட்டிமண்டபத்துப் பாங்கு அறிந்து ஏற்றுமின்”( - ) எனவும் குறிக்கப்பட்டுள்ளது. திருவாசகத்தில் “பட்டிமண்டபம் ஏற்றினை” (சதகம் - ) என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

“பன்னஅரும் கலைதெரி பட்டிமண்டபம்” எனக் கம்பராமாயணத்திலும் வருகிறது. இதனால் கலைகளை ஆராயும் இடமே பட்டிமண்டபம் என்பது புலனாகிறது. தற்காலத்தில் நடைபெ றும் பட்டிமன்றத்திற்கும் வழக்காடுமன்றத்திற்கும் உள்ள வேற்றுமைகள் பின்வருமாறு:

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →