📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Advanced Tamil · Page 55poem

- சார்வாகன்

Chapter 1: கதையியல் · Advanced Tamil

- சார்வாகன் ரங்கநாதனுக்குக் கோபமும் எரிச்சலும் அத்துமீறிக் கொண்டு வந்தது. குழந்தையின் முதுகில் அங்கேயே ஓர் அறை வைக்கக் கையை ஓங்கிவிட்டான். ஒருவரையொருவர் இடிச்சு மோதிக்கொண்டு வேர்வை நெடியும் தூசியும் பல்வேறு அழுகல் கறிகாய் வாசனைகளும் நிறைந்த நட்டநடுக் கடைத்தெருவில் செல்லுலாய்டு பிளாஸ்டிக் பொம்மைகளைப் பரப்பி வைத்திருந்த அந்தக் கிழவனை விட்டு நகரமாட்டேன் என்று சத்தியாக்கிரகம் செய்து கொண்டிருந்த குழந்தையின் கையை ஆத்திரத்துடன் அமுக்கிப் பிடித்தான். அகத்திலே உடைப்பெ டுத்துவரும் கோபத்தினால் கண்களைச் சுருக்கி ‘புஸ்புஸ்‘ஸென்று மூச்சு விட்டுக் கொண்டு “நீ வரயா இல்லை நான் ஒன்னை இங்கியே விட்டுட்டுப் போயிடட்டுமா?” என்று சீறினான். குழந்தை அவனை நிமிர்ந்து பார்த்தது. தும்பியின் சிறகைப் போலிருந்த அதன் கண்கள் பளபளத்தன. ஈனக் குரலில், “எனக்கு யானை வேணும்ப்பா” என்று கெஞ்சியது. அவன் காஞ்சிபுரம் கோவிலில் குழந்தைக்கு யானை காட்டினதிலேயிருந்து இரவும் பகலும் இதே பல்லவிதான். எனக்கு யானை வேணும்ப்பா! தன் பொருளாதார நிலையில் யானையைக் கட்டித் தீனி போட்டு மாளாது என்று குழந்தையைப் புரிந்து கொள்ள வைக்க அவனுக்கு ரெண்டு வாரங்கள் ஆச்சு. நாலு நாளாய்த்தான் யானையை மறந்திருந்தான். இப்போ மறுபடி பிடிச்சுக் கொண்டது. நடைபாதை யோரத்தில் வியாபாரம் செய்யும் கிழவனை வெறுப்போடு பார்த்துவிட்டு, “இங்கே யானை இல்லை. வா வீட்டுக்குப் போகலாம்” என்று குழந்தையின் கையை இழுத்தான். “அதோ இருக்கே” குழந்தை கையை நீட்டி ஒரு மூலையைக் காண்பித்தது. அது காட்டிய இடத்தில் நிசமாகவே ஒரு யானை இருந்தது. கிளிப்பச்சை நிறத்தில் உடம்பு, முதுகில் தங்கவர்ணத்தில் வேலைப்பாடுகளும், ரோஸ் நிற வாயும், நல்ல எலுமிச்சை மஞ்சளில் தந்தமும் கொண்டு தும்பிக்கை ரோஸ் நிறமான பின்பாகம் தெரியத் தூக்கி சலாம் போடும் நிலையில் நின்று கொண்டிருந்தது அந்த யானை. அத்தனை குப்பை சாமான்களுக்கிடையேயும் அதைக் கண்டுபிடித்து விட்ட குழந்தையின் கண் தீட்சண்யத்தை மனசில் சபித்துக் கொண்டே அதை வாங்கி விடலாம் என்று ஜேபியில் கைவிட்டான். அவன் பார்வை அந்த யானைமேல் பாய்ந்தது. அழகுணர்ச்சி மிக்க அவனுக்கு – அழகுணர்ச்சி தன்னிடம் நிறைய இருக்கிறது என்று பெருமைப்ப ட்டுக் கொண்டிருந்த அவனுக்கு – அந்தப் பிளாஸ்டிக் யானை துதிக்கையைத் தூக்கி ரோஸ் வாயைக் காட்டி அவனை ஏளனம் செய்வது போலிருந்தது. யானைக் குலத்தையோ ஐராவதம் முதல் வரதர்கோவில் யானைவரை இதுவரை உலகத்தில் இருந்த, இனிமேல் இருக்கப் போகிற அத்தனை யானைகளையும், அதோடு தன்னையும் பரிகாசம் செய்வது போலிருந்த அந்தப் பச்சையானை மேல் அவனுக்குத் திடீரென்று அளவுக்கு மிஞ்சின கோபமும் ஆத்திரமும் பொங்கிக்கொண்டு வந்தது. ‘‘ ‘சீ‘ இது வாணாம், அசிங்கம், யானை எங்கியாவது பச்சையாவா இருக்கும்? நான் ஒனக்கு நல்ல கருப்பு யானை வாங்கித்தரேன், இப்போ வீட்டுக்குப் போலாம் வா‘‘, என்று மறுபடியும் குழந்தையை இழுத்தான். குழந்தை நிமிர்ந்து கண்களை அகல விரித்துக்கொண்டு அவனைப் பார்த்தது. “நெஜம்மா” “நெஜம்மாத்தான், நீயே பாரு.” 11th Advance Tamil - - - :

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →