📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Advanced Tamil · Page 74question

- சோ. தர்மன்

Chapter 1: கதையியல் · Advanced Tamil

- சோ. தர்மன் கட்டடங்களை விட்டுத் தூரத்தில் இருந்த சிமெண்ட் களத்தில் எல் லோரும் கூடியிருந்தார்கள். அந்தச் சதுர வடிவ குறைந்த உயரமுள்ள சிமெண்ட் மேடை நிரம்பி வழிந்தது. ஒவ் வொருவர் பக்கத்திலேயும் முதல்நாள் அவர்கள் திரி சொருகி வைத்துவிட்டுப் போன வட்ட வளையங்கள் அடுக்கடுக்காய்க் குமிந்திருந்தன.

வட்டவட்டமாய் இருக்கும் அந்தத் தகர வளையங்களுக்குள் மருந்தடைத்து திரி சொருகி வைத்துவிட்டுப் போன பட்டாசுகள், அவற்றை வளையத்திற்குள்ளிருந்து வெளியே எடுத்து களத்தில் காயப்போட வேண்டும். ஃபோர்மென் சங்கரன் சுற்றிச்சுற்றி வந்தார். “ டேய், கீழ தட்டா த, தூர்மண்ணு உதிந்திடும். பிதுக்கி எடு, யேல, பிரக்கா சொல்றது காதுல ஏறுதா ஏறலியா?” பிரக்கன் பரக்கப்பரக்கப் பார்த்தான்.

“ஏணேய், வேல்ச்சாமிண்ணே ஃபோர்மேன் அண்ணாச்சி இன்னக்கி காலாங் காத்தாலயே பிதுக்கச் சொல்றாரு” எல்லோரும் சிரித்துக் குலுங்கினார்கள். கருப்பாயி வாயடங்கிப் போனாள். “என்னல, களத்தில ஒரே சிரிப்பாணியும் கும்மாள மும். எல்லாத்தையும் உதுத்து காயப் போடலன்னா இன்னக்கி வேலைக்கு வளையம் தரமாட்டான் .

தூக்குச் சட்டியத் தூக்கிட்டுப் போயிர வேண்டிதான்” சங்கரனின் அதட்டலை அவர்கள் சட்டை செய்யவில்லை. மருந்து கலந்து வெற்றுக்குழாய்களுக்குள் அடைத்துக் கொடுக்கும் ஃபோர்மேன் கொலம்பான் அங்கு வந்தான். கருத்த அவன் உடம்பில் ஒட்டியிருந்த அலுமினியப் பவுடர் வெயிலில் மினுமினுத்தது. “ஆரு வெள்ளக்காரத் தொரையா?

என்ன… தொரை… வளையம் குத்த ரெடியா இருக்கா?” “எப்பவும் நான் ரெடிதான்.” மேலோரத்தில் டிப்பிங் என்று சொல்லக்கூடிய, திரிகள் செய்யும் வேலை மும்முரமா ய் நடந்து கொண்டிருந்தது. நீளமான நூல்களைக் கருமருந்தும் பசையும் கலந்த வாளிக்குள் ஒரு பொடியன் முக்கி முக்கிக் கொடுக்க அதை இழுத்துக் கொண்டேபோய் நீளவசத்தில் கட்டப்பட்டிருக்கும் கம்புகளில் காயப் போட்டான். அவர்களின் முகமெல்லாம்கூட கருமருந்துகளின் கோடுகள். கோமாளி வேசக்காரனைப்போல.

கம்புகளில் தொங்கும் பசையும் கருமருந்தும் கலந்த நூல்கள் காயக்காய விறைப்பேறித் திரிகளாகும். மெல்லிய வெள்ளைத்தாளுக்குள் வைத்துச் சுருட்டி குரோஸ் போடவேண்டும். வெடியின் சைஸ்களுக்குத் தக்கபடி அளந்து அறுத்து மருந்து தொட்டு வெடிக்குள் சொருக வேண்டும். கழிவுத் திரிகள் ரொம்ப வந்தால் சம்பளம் கட்.

விறைப்புக் குறைவாக இருந்தால் மூணு குரோஸ் கணக்கு கட். “என்ன… உதுத்தாச்சா… எல்லாத்தையும் அள்ளி காயப் போடுங்கள ஏ, மிக்கேலு வெத்து வளையங்களைப் பெரக்கி அங்க போடு. குனிஞ்சு போடு, வீசி எறிஞ்ச சாம்பலாகிருவ.” மெதுவாய் முணங்கிக்கொண்டு மிக்கேலு குனிஞ்சு வெத்து வளையங்களை எடுத்தாள். அவளுடைய இரு கைகளிலும் தோள்வரை வளையங்கள் நிறைந்தன.

அவள் சல்சல் என்று தட்டி ஆட்டம் போட்டு நடித்துக்காட்டினாள். அண்ணாச்சி எல்லாத்தையும் உதுத்து காயப்போட்டாச்சு வெத்து வளையங்களையும் பெறக்கிக் குமிச்சாச்சு. குத்துறதுக்கு வளையம் குடுங்க. 11th Advance Tamil - - - :

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →