📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Advanced Tamil · Page 210poem

சுதேசி ஒளிக்கு அஞ்சும் ஆந்தைகள்

Chapter 2: அரங்கவியல் · Advanced Tamil

சுதேசி ஒளிக்கு அஞ்சும் ஆந்தைகள் மிதவாதிகளை எள்ளி நகையாடுதல் போலவும், ஆங்கிலேய அரசை விமர்சிப்பது போலவும் கருத்துப்படங்கள் அமைந்திருந்தன. நாடு விரைந்து சுதந்திரம் அடைய போராடியவர்களுக்கு முட்டுக்கட்டை போட்ட மிதவாதிகளைப் பாரதி தயக்கமின்றி எதிர்த்து எழுதினார். சித்திரம் ஒன்றில் அவர்களைச் ‘சுதேசி ஒளிக்கு அஞ்சும் ஆந்தைகள்’ என்று பழித்தார். இவர்களை நிதானக் கட்சியினர், பழைய கட்சியினர் என்று அழைத்தார். அத்துடன் உலக அரசியல் நிகழ்வுகளைக் கூறியும் மிதவாதிகளை விமர்சித்தார். ‘‘கொட்டினால் தேள் கொட்டாவிட்டால் பிள்ளைப்பூச்சி’’ ( . . ) என்று அமெரிக்கா, ஜப்பான் நாடுகளின் அரசியல் சூழ்ச்சிகளைப் படம் பிடித்துக்காட்டியுள்ளார்.

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →