📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Advanced Tamil · Page 234poem

மதுரைத்திட்டம்

Chapter 3: கணித்தமிழியல் · Advanced Tamil

மதுரைத்திட்டம் மதுரைத்திட்டம் எவ்வித அரசு, தனியார் உதவியோ, வாணிக நோக்கமோ இன்றி நடைபெறுகின்ற ஒரு தன்னார்வ முயற்சி. 1998ஆம் ஆண்டு தமிழர் திருநாள் அன்று தொடங்கப்பட்ட இத்திட்டம், இன்றும் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது. உலகில் வெவ்வேறு நாடுகளில் வாழும் முந்நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்களும் தமிழார்வலர்களும் ஒன்றுகூடி இத்திட்டத்தைச் செயலாக்கம் செய்து வருகின்றனர். அதற்கென உலகின் பல நாடுகளில் வாழ்ந்துவரும் தமிழர்கள், கூட்டு முயற்சியாக அவரவர் தங்களுக்குக் கிடைக்கும் நேரங்களில் தமிழ் இலக்கியங்களைக் கணினியில் உள்ளிட்டு, பிழை திருத்தி மின்பதிப்புகளாகத் தயாரிக்கின்றனர். பின்னர் இவற்றை மதுரைத் திட்டத்தில் பதிவேற்றம் செய்கின்றனர். தமிழ் இலக்கியங்களை மின்நூல்களாகப் பாதுகாத்துப் பகிர்ந்து கொள்வதில் விருப்பமுள்ள அனைவரும் இத்திட்டத்தில் பங்கு பெறலாம்.

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →