மகளிர் இதழ் வை. மு. கோதைநாயகி. இல் ”ஜகன்மோகினி” என்னும் நாவல் இதழினை அதன் பதிப்பாளராகவும் ஆசிரியராகவும் இருந்து நடத்தியவர்.
முதலில் மாத நாவலாக வெளிவந்துகொண்டிருந்த ”ஜகன்மோகினி” -இல் மகளிருக்கான இதழாகத் தன்னை மாற்றிக்கொண்டது. பண்டிதத் தமிழில் ஏனைய பத்திரிகைகள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் எளிய நடையில் பாமரரும் படித்தறியும் வகையில் இவர் எழுதியதும் ஜகன்மோகினியின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம். தமிழ் இதழியல் வரலாற்றில் முதன்முறையாக ஒரு பெண்ஆசிரியர் பொறுப்பேற்று நடத்திய ‘ஜகன்மோகினி’ இதழ் வெள்ளிவிழா கொண்டாடியது ஒரு சாதனையாகும். இன்றைய மகளிர் இதழ்களின் தவிர்க்க முடியாத தன்மையாக விளங்கும் சமையல், கோலம், அழகுக் குறிப்பு, சோதிடம் போன்றவை அன்றைய ஜகன்மோகினியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
”ஜகன்மோகினி”யின் துணைவெளியீடாக நந்தவனம் என்ற இதழையும் வெளியிட்டு, அதன்மூலம் நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்களை வை.மு.கோ. அறிமுகப்படுத்தினார். ஆண்டுகள் பத்திரிகை ஆசிரியராகப் பணியாற்றிய கோதைநாயகி பள்ளிப்படிப்பு இல்லாதவர். இவர் எழுதியுள்ள நாவல்களில் ‘அனாதைப்பெண்’, ‘தயாநிதி’ போன்றவை திரைப்படங்களாக வெளிவந்துள்ளன.
எழுத்தாளர், பத்திரிகையாளர், தேசியவாதி, இசைக்கலைஞர், திரைப்படத் தணிக்கைக்குழு உறுப்பினர் என்று பன்முகத்தன்மை கொண்டிருந்த வை.மு.கோ. மிகச்சிறந்த இதழாளர் என்பதோடு பின்னாட்களில் உருவான பெண் இதழாளர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாகவும் விளங்கினார் .