மொழி வளர்ச்சியில் இதழ்கள் தமிழ்ம ழியின் வளர்ச்சியில், இதழ்களின் பங்கு அளப்பரியது. எழுத்துருவாக்கம், புதுமையாக்கம், கலைச்ச ல் படைத்தல் போன்றவற்றிற்கு இதழ்கள் பெருந்துணை புரிகின்றன. தொடக்கக்கால இதழ்களில் பிறம ழி கலந்தே எழுதிவந்தனர். பின்னர் வந்த இலக்கிய இதழ்களும் தனித்தமிழ் இயக்க இதழ்களும் பிறம ழிக் கலப்பின்றி வெளிவந்தன.
தமிழ் இதழியலில் மிகப் பெரிய மாற்றங்களை உருவாக்கிய பெருமை திரு.வி.கலியாண சுந்தரனாரையே சாரும். அவரின் இதழ்களில் கலப்பில்லாச் செந்தமிழ், சிறப்போ டு வளர்ந்து வந்தது. புதுப்புதுத் தமிழ்ச் சொற்கள் உலா வந்தன. தமிழ் உரைநடை வரலாற்றில் அவரது நடை குறிப்பிடத்தக்க ஒன்றாகத் திகழ்ந்தது.
தனித்தமிழ் இயக்க இதழ்கள் தமிழ் வளர்ச்சிக்கு உதவியுள்ளன. மறைமலை அடிகளின் ‘அறிவுக்கடல்’, சி.பா.ஆதித்தனாரின் ‘தமிழன்’, ‘தமிழ்க்கொடி’ பாரதிதாசனின் ‘குயில்’ பெருஞ்சித்திரனாரின் ‘தென்மொழி’, ‘தமிழ்ச்சிட்டு’ போன்றவை தமிழ் மொழி வளர்ச்சிக்குப் பெருந்தொண்டாற்றிய இதழ்களாகும். தமிழில் எழுத்துச் சீர்திருத்தத்தோடு வெளிவந்த பெரியாரின் ‘விடுதலை’, ‘குடியரசு’ ஆகிய இதழ்கள் தமிழ்ம ழி வளர்ச்சியில் முக்கிய பங்காற்றின. 11th Advance Tamil - - - :