நடை மணியும் பவள மும் கலந்ததுபோல் வடசொற்களையும் தமிழ்ச்சொற்களை யும் கலந்து எழுதும் நடை. இடைக்காலத்தில் இந்நடை செல்வாக்குப் பெற்றிருந்தது. பல்லவர் காலத்தில் எழுதப்பட்ட ஸ்ரீபுராணம், சத்திய சிந்தாமணி முதலிய நூல்கள் இந்நடையில் அமைந்திருந்தன. (காவலாளர் - மணிமேகலை ), (கஞ்சக்காரர் – சிலம்பு ).
பல்லவர், சோழர், நாயக்கர் காலங்களிலும் மொழியில் மாற்றங்கள் ஏற்பட்டன. நாயக்கர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட காரன், காரி, சாலி ஆகிய ஆக்கப்பெயர் விகுதிகள், இக்காலத் தொடர்களிலும் மிகுதியாகப் பயன்படுகின்றன. இவை வடம ழியோடு ஒப்புமையாக்கப்பட்ட விகுதிகளாகும். எடுத்துக்காட்டாகப் பால்காரன், வீட்டுக்காரி, வண்டிக்காரர், புத்திசாலி, பலசாலி, பொறுமைசாலி, திறமைசா லி, மேலாளர், விற்பனையாளர், உரிமையாளர், கல்வியாளர், சிந்தனையாளர் ஆகியவற்றைக் கூறலாம்.
தொடர்களையும் அவற்றிற்குரிய இலக்கண விதிகளையும் அறிந்துகொள்வது மட்டுமன்றிப் பலவகைத் தொடர்களைப் பயன்படுத்திப் பிழையின்றிப் பேசவும் எழுதவும் செய்வோம். மொழியின் தொடரியல் அமைப பைப் போற்றுவோம். தோன்றா எழுவாய் தோன்றாச் செயப்படுபொருள் தோன்றாப் பயனிலை இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு‘ குறள். எது இன்பம் பயக்கும்?
என்னும் வினாவுக்கு, மாசறு காட்சியவர்க்கு அக்காட்சி இன்பம் பயக்கும். இங்குக் காட்சி என்பது, தோன்றா எழுவாய். சென்ற இடத்தால் செலவிடா தீதொரிஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு‘ குறள். எதை உய்ப்பது அறிவு?
என்னும் வினாவுக்கு, மனத்தை உய்ப்பது அறிவு என விடை வரும். இங்கு, மனம் என்பது, தோன்றாச் செயப்படுபொருள். கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை‘ குறள் . கெடுக்க வல்லதும் மழை , காக்க வல்லதும் மழை .
இங்கு வல்லது என்பது, தோன்றாப் பயனிலை. நாம்தான் அச்சொல்லை வருவித்துக் கொள்ளல் வேண்டும்.