📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Advanced Tamil · Page 235poem

ஒரு கற்பனை உரையாடல்

Chapter 3: கணித்தமிழியல் · Advanced Tamil

ஒரு கற்பனை உரையாடல் அந்த அழகிய மலை நாடு, உயர்ந்து அடுக்கடுக்காய்ப் பரந்து கிடந்த மலை களின் ஊடாக அமைந்திருந்தது. வானோக்கி வளர்ந்து கிடந்தன அடர்ந்த மரங்கள். மரங்களின் உச்சியிலிருந்த இடைவெ ளித் துளைகள் வழியாக ஞாயிறு வெள்ளிமழை யாகத் தன் கதிர்களைச் சொரிந்து கொண்டிருந்தது. மலைக்காடெங் கும் மகிழ்வூட்டும் பச்சை வெளிச்சம். செடிகளின் சிரிப்பாய் எங்கெங்கும் பூத்துக் கிடந்த பூக்கூட்டம் அந்த மலை நாட்டுக்கு வருவோரை வரவேற்பதுபோல் இருந்தது. ஆங்காங்கே கீழிறங்கும் அருவிகள் மலை களின் மேனிகளில் நீளமான வெள்ளிக் கம்பளங்களை விரித்ததுபோல் காணப்பட்டன. அந்நாட்டின் அரண்மனைக்குச் செல்லும் ராஜபாதை எங்கும் வாழையும் கமுகும் கட்டப்பட்டு, கரும்புச் சரங்களாலும் காய்கனித் தோரணங்களாலும் அழகுபடுத்தப்பட்டிருந்தன. மலை நாட்டுத் தலைவனான மன்னனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் அவை அமைக்கப் பட்டிருந்தன. மலைப்பாதை எங்கும் மக்கள் அணியணியாய்த் திரளத் தொடங்கியிருந்தனர். மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்தது போலவே அக்குழுவினர் வரத்தொடங்கினர். பாணர், பாடினியர், விறலியர் குழுவினராய்ப் பறை, முழவு, துடி, போன்ற கருவிகளை யாழின் இராகத்திற்கேற்ப இசைத்தவாறு ராஜபாதையைக் கடந்து அரண்மனைக்குள் நுழைந்தனர். மன்னன் பெருமகிழ்வோடு பொன் 11th Advance Tamil - - - :

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →