உ. காட்சித்துணுக்கு முறை கடந்தகால நிகழ்வுகளை அல்லது நினைவுகளை, புகைப்படப் பிரதிகளை அடுக்கிக் காட்டுவதுபோலக் காட்சித் துணுக்குகளாகச் சொல்லிச் செல்லும் முறை. இதை ஒரு விரைவான பின்னோக்குமுறை என்றும் கூறலாம். (எ.
கா. ) நம் பாடப்பகுதியில் அமைந்துள்ள ஆர். சூடாம ணியின் ’இறுக மூடிய கதவுகள்’ கதையில் மகனின் நினவுக்காட்சிகளாகச் சொல்லப்படும் கீழ்க்காணும் வரிகளைக் காட்சித்துணுக்கு முறைக்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். ‘ புரண்டு படுத்தேன்.
மறுபடியும் அரைத்தூக்க நிலை. கண்களுள் மீண்டும் இளம் அம்மாவின் முகம். அதில் ஒருவித ஆவல். உதடுகள் ஏதோ சொல்கின்றன.
சிறுவனின் கண்களில் அதிர்ச்சி. மறுப்புக்குறியில் தலை இடவலமாய் அசைகிறது’