ஊடகம் உலகின் பல்வேறு இடங்களில் நாள்தோறும் நடைபெ றும் நிகழ்வுகளை மக்க ளுக்குக் கொண்டுசெல்ல உதவும் கருவிகளே ஊடகங்கள். இவற்றை அச்சு, காட்சி, கேட்பு, இணையவழி ஊடகங்கள் என வகைப்படுத்தலாம். செய்திப் பதிவுகளையும் படங்களையும் உள்ளடக்கிய இதழ்களே அச்சு ஊடகங்கள். நிகழ்வுகளைக் காணொளிகளாக ஒளிபரப்பும் தொலைக்காட்சி, காட்சி ஊடகம். நிகழ்வுகளை உரை வடிவங்களாக ஒலிபரப்பும் வானொலி, கேட்பு ஊடகம். இன்றைய அறிவியல் வளர்ச்சியினால் அச்சு, காட்சி, கேட்பு ஆகிய ஊடகப்பதிவுகளை இணையவழி ஊடகம் ஒருங்கிணைக்கிறது . இவை அனைத்தின் வழியாகவும் செய்திகள் மக்கள ச் சென்றடைகின்றன.
📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Advanced Tamil · Page 190poem
ஊடகம்
Chapter 2: அரங்கவியல் · Advanced Tamil
Related topics
Have a question about this topic?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →