📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Advanced Tamil · Page 159grammar_exercise

உருபனியலை அடையாளங்காணல்

Chapter 2: அரங்கவியல் · Advanced Tamil

உருபனியலை அடையாளங்காணல் முருகனுக்குத் தந்தான், பசித்தவர்க்கு உணவ ளித்தான் என்னும் தொடர்களில் கு என்னும் வேற்றுமையுருபு கொடைப்பொருளையே குறிக்கிறது. இவ்வுருபை மேலும் பகுக்க முடியாது. கு என்னும் உருபை முருகன், பசித்தவர் ஆகிய சொற்களிலிருந்து பிரித்தாலும், பெயர்ச்சொற்கள் பொருளைத் தருகின்றன. ஆனால், கொக்கு, சுக்கு ஆகிய சொற்களிலுள்ள கு என்பதைப் பிரிக்க முடியாது.

பிரித்தால் கொக், சுக் என்பன பொருள் தரா. ஆகவே, முருகனுக்கு – கு என்பது ஓர் உருபன். கொக்கு – கு என்பது உருபன் அன்று. அது சொல்லின் உறுப்பே.

11th Advance Tamil - - - :

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →