📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Advanced Tamil · Page 205poem

விடுதலை இந்தியாவில் இதழ்கள்

Chapter 2: அரங்கவியல் · Advanced Tamil

விடுதலை இந்தியாவில் இதழ்கள் சிறையிலிருந்து விடுபட்ட பறவையைப்போ ல, இந்திய மக்க ளின் இதயங்களும் சிறகடித்துப் பறக்கத் தொடங்கின. இதயங்கள் மட்டுமல்ல , இதழ்களும் கருத்துச் சுதந்திரம் பெற்றன. அடிமை இந்தியாவில் ஆங்கில ஆட்சியின் அடக்குமுறையை எதிர்த்துச் சில இதழ்களே வெளிவந்தன. விடுதலைக்குப் பின் எண்ணற்ற இதழ்கள் தோன்றிச் சுதந்திரமாகச் செயல்படத் தொடங்கின. இதழ்கள் நாட்டுநடப்புகளையும் அறிவுசார் செய்திகளையும் அரசின் செயல்பாடுகளையும் மக்களுக்குத் தெரியப்படுத்தும் நோக்கோடு வெளிவருகின்றன. சமுதாயத்தில் நடக்கும் சீர்கேடுகளைக் கண்டறிந்து வெளியிடுவதன்மூலம் சமுதாயத்தை நெறிப்படுத்த அவை துணைபுரிகின்றன. சமுதாயத்தின் பல எதிர்ப்புகளைத் தாண்டி நடுநிலையோடு செய்திகளை வெளியிட்டு, நாட்டு மக்க ளின் வளமான வாழ்விற்கான அடித்தளத்தை அமைப்பதில் இதழ்களின் பணி இன்றியமையாததாகும்.

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →