வினைமுற்று முக்காலத்தும் இருக்கும் ஒரு பொருளை விளக்கும்போது, அத்தொடரின் வினைமுற்று, செய்யும் என்னும் வாய்பாட்டில் அமைதல் வேண்டும் என வினையியலில் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார். எடுத்துக்காட்டாக, நீர் குளிரும் மலை நிற்கும் ஞாயிறு தோன்றும் ஐப்பசி மாதத்தில் அடைமழை பெய்யும் நூலகம் காலை ஒன்பது மணிக்குத் திறக்கும் ஆகிய தொடர்களைக் கூறலாம். இவையனைத்தும் செய்யும் என்னும் வாய்பாட்டால் அமைந்துள்ளன. இதுபோல் ஆங்கிலத்திலும் உண்டு.
(எ.கா.) The Sun rises in the east. முந்நிலைக் காலமும் தோன்றும் இயற்கை எம்முறைச் சொல்லு நிகழும் காலத்து மெய்ந்நிலைப் பொதுச்சொல் கிளத்தல் வேண்டும் (தொல்.வினை. )