📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Advanced Tamil · Page 163grammar_exercise

வினாவிடை நடை

Chapter 2: அரங்கவியல் · Advanced Tamil

வினாவிடை நடை கைபுனைந்தியற்றா ஓரழகே அழியா அழகெனப்படும். கைபுனைந்தியற்றும் அழகு அழியுந்தன்மையது. கைபுனைந்தியற்றாக் கவின்பெறு வன ப்பு என்றார் நக்கீரனாரும். கையால் செய்யப்படுவது செயற்கை.

கையால் செய்யப்படாதது இயற்கை. மலையும் ஆறும் காடும் கடலும் எவர் கையால் ஆக்கப்பட்டன? அவை எக்கருவிகளால் செய்யப்பட்டன? ஞாயிறும் திங்களும் விண்மீன்களும் எவரால் செய்யப்பட்டன?

புனலுக்குத் தண்மை ஈந்தவர் எவர்? நெருப்புக்கு வெம்மையூட்டினவர் எவர்? இயல்பாக அரும்பிய இவற்றின் அழகே கைபுனைந்தியற்றாக் கவின்பெறு வனப்பாகும். மற்றையது போலி.

-முருகன் அல்லது அழகு, திரு. வி. கலியாண சுந்தரனார் இவ்வுரைப்பகுதியில் வினா கேட்டு, அதற்கு விடை கூறுவது போன்ற தொடர்கள் அமைந்துள்ளன. பண்டைய இலக்கண உரைநூல்களில், இவ்வினா விடை நடையை ப் பெரிதும் காணலாம்.

இதற்குத் தடைவிடை நடை என்றும் பெயர். (தாமே தடைகளை எழுப்பி, விடை கூறும் நடை). இவ்வுரைப்பகுதியின் மொழிநடைச் சிறப்பைப் பட்டியலிடுவோமா! • சிறு சிறு தொடர்களாக அமைந்துள்ளன.

• வினாத்தொடர்கள் இடம்பெற்றுள்ளன. ஒரு வேர்ச்சொல்லிலிருந்து, எண்ணற்ற சொல் வடிவங்களை/சொல்லாக்கங்களை உருவாக்க இயலும். எ.கா. படி என்னும் வேர்ச்சொல்லிலிருந்து .

. . படித்த படித்து படித்தல் படிக்கிறேன் படித்தேன் படிப்பேன் படிக்கிறோம் படித்தோம் படிப்போம் படிக்கிறாய் படித்தாய் படிப்பாய் . .

. மேலும், பல சொல் வடிவங்களைக் காண இந்த வலை த்தளத்தைப் பார்வையிடுங்கள். www. tamilvu.org (தமிழ் இணையக் கல்விக்கழகம்) 11th Advance Tamil - - - :

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →