மரணதண்டனை வழங்கல், காதறுத்தல், சாட்டையடி, கிடங்கில் போடுதல் முதலிய தண்டனைகள் அக்காலத்தில் வழங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வீடுகளில் திருடி வரும் கும்பல் ஒன்று பிடிபட்டபோது, அவர்களுள் தலைமை த் திருடனைக் கடைத்தெருவில் தூக்கில் தொங்கவிட்டனர். ஏனைய இருவருக்கும் இரண்டு காதுகளை அறுத்து, ஐம்பது கசையடிகளும் தரப்பட்டன. ஆனந்தரங்கர் நாட்குறிப்பின் பெரும்பகுதி வணிகச் செய்திகளையே விவரித்துள்ளது.
கணக்கு வரவுசெலவுப் பட்டியல் என அச்செய்திகள் நீண்டுள்ளன. ஆனந்தரங்கரும் பிறரும் வணிகத்திற்கு முதன்மை அளித்துள்ளதை உணரமுடிகிறது. பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கழகம் வணிகர் பலரை ப் பங்குதாரராகக் கொண்ட கூட்டு நிறுவனம் ஆகும். தமது மூலதனத்திற்கு ஏற்ப ஒவ்வோராண்டும் எத்தனை கப்பல்களைக் கீழை நாடுகளுக்கு அனுப்புவது என்பது முன்பே திட்டமிடப்பட்டது.
புதுச்சேரியில் இருந்து மணிலாவுக்குச் சென்ற கப்பலில் அழகப்பன் என்ற தமிழ் மாலுமி பணியாற்றியதையும் அவர் பதிவு செய்துள்ளார். ஐரோப்பா விலிருந்து இந்தியாவை அடைய, கப்பல்களுக்கு ஆறு திங்கள் தேவைப்பட்டன. . .
அன்று பிரான்சிலிருந்து புறப்பட்ட கப்பல் . . அன்று புதுச்சேரியை அடைந்துள்ளது. கப்பல் வந்தவுடன் பீரங்கி முழங்குதல் வழக்கத்தில் இருந்துள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் துணிகளுக்காக வர்த்தகரிடமும் தரகரிடமும் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. சிலர், கழகத்தின் ஆனந்தரங்கர் நாட்குறிப்புக் குறித்து உ. வே. சா.
தமிழ்த்தாய் நெருப்பினாலும் வெள்ளத்தினாலும் பாதிக்கப்பட்டாலும் அவளது ஆபரணங்கள் தொலை வில் உள்ள நகரமான பாரீசில் மிகவும் பாதுகாக்கப்பட்டுப் பராமரிக்கப்படுகின்றன. அந்தக் காலத்தில் நடந்த செய்திகள யெல்லாம் முக்கியமானது, முக்கியமில்லாதது என்று கூடக் கவனிக்காமல், ஒன்று தவறாமல் சித்திரகுப்தன் எழுதி வரும் பதிவைப் போல நல்ல பாஷையில் அன்றாடம் விஸ்தாரமாக எழுதி வைத்திருக்கிறார், ஆனந்தரங்கர் . - வ.வே.சு. XI Std Tamil வர்த்தகர் என்ற அங்கீகாரத்தைப் பெற்றிருந்தனர்.
துணிகள், வர்த்தகருக்கு விற்கப்பட்டபோ து உரிய இரசீதுகள் அவர்களிடமிருந்து பெறப பட்டுள்ளன. 100க்கு என்ற விகிதத்தில் அவர்கள் ஆறு திங்களுக்குள் கழகத்திற்குப் பணத்தைச் செலுத்திவிடுவதாகவும் கையெழுத்திட்டுக் கொடுத்தனர். வணிகக் கழகத்தின் அதிகாரியான கொர்னே இவற்றைப் பெற்றுப் பாதுகாத்துள்ளார். புதுச்சேரியில் நாணயம் அச்சிடும் உரிமையை நிஜாமிடமிருந்து பிரெஞ்சு வணிகக் கழகம் பெற்ற து.
இதற்கான ஆணையை . . அன்று கனகராயர் பல்லக்கில் வைத்து ஊருக்குள் கொண்டு வந்தார். பீரங்கிகள் முழங்கின.
எட்டு மாற்றுக்குக் குறைவான வராக நாணயங்களை வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம் என்று பிரெஞ்சு மன்னரின் ஆணையின் பேரில் 1739ஆம் ஆண்டு மே திங்களில் அறிவிக்கப்பட்டது. பல்வேறுவிதமான வராகன்களை ஆனந்தரங்கர் குறிப்பிட்டுள்ளார். அவை புதுச்சேரிப் பிறை வராகன், சென்னைப் பட்ட ணத்து நட்சத்திர வராகன், வட்ட வராகன், பரங்கிப் பேட்டை வராகன், ஆரணி வராகன் முதலியன. ஆனந்தரங்கரின் பதிவுகள் ஆம் ஆண்டு ஆம் நாள் வியாழக்கிழமை மாலைப் பொ ழுதிலே வீசிய பெருங்காற்று புதுச்சேரியைச் சூறையாடியதனை, ”அஸ்தமித்த உடனே துவங்கிப் பெருங்காற்று அடித்தது.
ஊரிலே உண்டான மரங்களெல்லாம் படுகாடாய் விழுந்து போன தும், வீடுகள் வெள்ளத்தில் முழுகிப்போ ய், அந்த வெள்ளத்திலே வீடுகளை அடித்துக்கொண்டு போன தும், மாடுகள், கன்றுகள், மனுஷர் செத்ததும் தெருவுக்குத்தெரு பிணநாற்றமாய் இருந்தது!” என்று மனம் நொந்து எழுதியுள்ளார். இப்பேரிடர் புதுச்சேரியில் நிகழ்ந்தபோ து மக்கள் எல்லோ ரும் உணவும் நீரும் இன்றி வாடினர். அப்போது ஒழுகரையிலே கனகராயர் , பெருஞ்சோறு அளித்துத் தமிழரின் இரக்கத்தையும்